top of page

தேவனுக்கு பதிலாக பேசுபவன் தீர்க்கதரிசி.

அவன் சபைக்கு நிகழ்கால சத்தம்.

தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். 2 பேதுரு 1-21.


கர்த்தர் எரேமியாவை ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக கட்டளையிட்டார்.அவர் அவன் வாயை தொட்டு இதோ என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன் என்றார். (ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும். வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே. அவன் சேனைகளையுடைய கர்த்தரின் தூதன். மல்கியா 2-7.

தேவனுக்கு வாயாய் இருப்பது மாபெரும் சிலாக்கியம்.இதில் மாபெரும் பொறுப்பும் உண்டு. அதுமட்டுமல்ல நமது வாயில் அவர் வார்த்தையை வைக்க நாம் தகுதி பெற்றவர்களாய் இருக்க வேண்டும். ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி தனது நாவாகிய கடிவாளத்தை பரிசுத்த ஆவியானவரின் கையில் முழுவதும் அற்பணிக்க வேண்டும். ஆவியானவர் அந்த நாவை தனது நாவாக்கி சபையை நடத்துகிறார். கர்த்தர் எரேமியாவை நோக்கி நீ தீழ்பானதினின்று விலையேறப்பெற்றதை பிரித்தெடுத்தால் என் வாய் போலிருப்பாய் என்றார். (எரே 15-19). நாம் நம் நாவை கவனமாக காத்து கொள்ள வேண்டும். உலகத்தானே யாகாவராயினும் நாகாக்க என்றான், அப்படியென்றால் ஒரு தேவனது தீர்க்கதரிசி நாவை காத்து கொள்ள வேண்டியது எத்தனை அவசியம்.தீர்க்கதரிசனத்தை அற்பமாக எண்ணாதிருங்கள். கள்ள தீர்கதரிசிகளை அவர்கள் கனிகளினால் நிதானித்து அறியுங்கள்.

 

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்:நீதிமொழிகள் 29-18ஒரு தீர்க்கதரிசி வீணான வார்த்தைகள் குறை சொல்லும் வார்த்தைகள் புண்படுத்தும் வார்த்தைகள்,பரியாச வார்த்தைகள்,பொய் வார்த்தைகளுக்கு தன்னை விலக்க வேண்டும். என் வாய்க்கு காவல் வையும்,என் நாவின் வாசலை காத்து கொள்ளும் என்று ஜெபிக்க வேண்டும். என் வாயின் வார்த்தைகளும் என் இருதயத்தின் தியானமும் உமது சமூகத்தில் பிரியமாயிருப்பதாக என்று சங்கீதகாரனை போல கதற வேண்டும்.அப்போழுது தேவனுடைய கலப்படமற்ற வார்த்தைகள் உங்கள் நாவின் மூலமாய் வந்து ஆயிரங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். எனக்காய் பேசிட நாவு வேண்டும் என்ற ஆவியானவர் கையில் இருப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம். அன்றைக்கு ராஜாக்களை ஏற்படுத்தினவர்கள் தீர்க்கதரிசிகள். ராஜாக்களின் பாவத்தை தவறை கண்டித்து உணர்த்தினார்கள், சபைகளில் தீர்க்கதரிசிகள் இருந்தார்கள், இன்றைக்கும் சபைகளில் மறைந்து இருக்கிறார்கள்.

 

ஆனால் சபையில் அவர்கள் வாய் அடைக்கப்பட்டுள்ளது. போதகர்கள் தேவனது குரலை கேட்க விரும்புவதில்லை. அவர்கள் இறுமாப்பாய் சபையை ஆளுகிறார்கள். மோசேயோடு பேசின ஆண்டவர் எங்களிடம் பேச மாட்டாரா என்று சொல்கிறார்கள். சபையில் தீர்க்கதரிசிகளை பயன்படுத்தாததினால் தேவ சித்ததிற்கு மாறான பல காரியங்களை செய்கிறார்கள். எனவே தான் சபை விழ்ச்சியை நோக்கி செல்கிறது. இன்னும் சில போதகர்கள் தங்களுக்கு தீர்க்கதரிசன வரம் இல்லாததினால் தீர்க்கதரிசன ஊழியங்களை அற்பமாக எண்ணி பேசுகிறார்கள்.

 

ஒரு முறை நாங்கள் ஒரு தேசத்தில் உள்ள சபைகளுக்காக ஜெபித்த போது ஆவியானவர் இடைப்பட்டு இங்குள்ள சபைகளில் நான் பல தீர்க்கதரிசிகளை வைத்திருக்கிறேன் அவர்கள் வாய் மூடி மௌனமாக இருக்கிறார்கள். அவர்களை பேச சொல், அப்பொழுது பரலோகத்தில் அவர்கள் பெலன் மிகுதியாக இருக்கும். என்று பேசினார்,ஊழியக்காரர்களே தேவன் கொடுத்த ஊழியமாகிய தீர்க்கதரிசன ஊழியத்தை அசட்டை பண்ணாதிருங்கள்.

 

உங்கள் சபையில் உள்ள உண்மையான தீர்க்கதரிசிகளை பயன்படுத்துங்கள், ஒரு தீர்க்கதரிசி அறிவை உணர்த்தும் வரமும்(நிகழ் காலம் கடந்த காலத்தை அறிதல்)ஞானத்தை போதிக்கும் வரமும்(தேவனுடைய திட்டங்களையும் சித்தத்தையும் நோக்கத்தையும் அறிதல் அற்புதங்களை செய்யும் சக்தி,குணமாக்கும் வரங்௧ள்,தீர்க்கதரிசனம் உரைத்தல் போன்ற வரங்களை வாஞ்சித்து கதற வேண்டும். அனனியா என்பவன் பவுலை குறித்த தேவ திட்டங்களை அறிந்தான். பவுலின் கண்களை திறந்தான்,ஆவியின் அபிஷேகத்துக்குள் பவுலை நடத்தினான். அனனியாவை தேவன் இந்த மகிமையான பணிக்கு பயன்படுத்த காரணமும் இருந்தது, அவன் வேதப்பிரமாணத்தின்படி பக்தியுள்ளவன். சகல யூதர்களாலும் நல்லவன் என்று சாட்சி பெற்றவன், ஆவியின் கனிகளையும் வெளிப்படுத்தியவன். ஒரு தீர்க்கதரிசி சபைக்கு தீர்க்கதரிசன செய்தியை கொண்டு வருவது மாத்திரமல்ல தனிநபருக்கும் தீர்க்கதரிசனம் உறைக்க அழைக்கப்பட்டவன்.

 

போதகர்களே!!!?  உங்களுக்கு தீர்க்கதரிசன வரம் இருக்கலாம், ஆனால் தேவனால் பிரத்தியேக தீர்க்கதரிசன அபிஷேகத்தை பெற்ற தீர்க்கதரிசிகள் உங்கள் சபையில் இருக்கிறார்கள். அவர்களை தடை பண்ணாதிருங்கள்?!, அவர்களை அற்பமாக எண்ணாதிருங்கள்?!! நாம் தேவனுடைய  ராஜ்ஜியத்துக்காக ஊழியம் செய்கிறோம், தேவன் எதை செய்ய சொல்கிறாரோ அதை மாத்திரமே செய்வோம். தேவனுயை நன்மையும் பிரியமும் பரிபூரணமான சித்தத்தை அறிந்து கொண்டு ஊழியம் செய்யவில்லையென்றால் நிச்சயமாக இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிப்பவர்களாக ஆகிவிடுவோம்.(தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்குப்பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.


1 கொரிந்தியர் 14-3 தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்
நீதிமொழிகள் 29-18)

bottom of page