top of page

வாலிபர்களை வீழ்ச்சியடைய வைக்கும் சாத்தானின் அதி நவீன தந்திரங்கள்

 

இன்றைக்கு வாலிபர்கள் தேவனுக்காக வைராக்கியமாக எழும்பும் காலம், தேவனுக்கு தேவை நம்முடைய வாலிப நாள்கள். இயேசு கிறிஸ்து தன் வாலிப நாள்களில் தான் ஊழியம் செய்தார், கடைசி நாள்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றும் போது உன் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்,உன் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள் என்று கர்த்தர் சொன்னார். தீங்கு நாள்கள் வாராததற்கு முன் உன் வாலிப காலத்தில் உன் சிருஷ்டிகரை நினை என்று வேதம் சொல்கிறது. ஆனால் தேவனுக்கு நேரத்தை செலவிடாதபடி மறைவிடங்களில் வாலிபர்களை வசியம் செய்து அவர்களை வீழ்த்தும் படி அநேக காரியங்கள் உருவாக்கப்படுகிறது.அது அவர்கள் உபயோகப்படுத்தும் Smart Phone மூலமாக அவர்களை ஆளுகை செய்து தேவனை விட்டு படிப்படியாக விலக செய்து அவர்களை இருளின் ராஜ்ஜியத்தின் ஆளுகைக்குள் கொண்டு செல்கிறது.( உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.உபாகமம் 28:34)

 

இந்த கடைசி நாள்களின் உன் கண்கள் காணும் காரியங்களில் மதிமயங்கி போகும் படி அநேக  Programme கள் அந்தகார ஞானத்தினால் உருவாக்கபட்டு உங்கள் வீட்டில் இருக்கும் வாலிபர்கள் கரங்களில் தவழ்கிறது. அதன் மூலமாக ஒரு சில நிமிடங்களில் உங்கள் வாலிபர்கள் இருளின் வல்லமையின் ஆளுகைக்குள் போய் விட முடியும். நம்முடைய பிள்ளைகள் வேதத்தை தியானம் பண்ணாதபடிக்கு தேவ சமூகத்தில் காத்திருந்து தேவ வல்லமையை பெற்று கொள்ளாதபடிக்கு பிசாசு மிகவும் தீவிரமாகவும் தந்திரமாகவும் செயல்படுகிறான்.    உங்க பிள்ளைகள் Smart phone மூலமாக நல்ல காரியத்தை தான் பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் பார்க்கும் அந்த நல்ல காரியத்தில் மறைந்திருக்கும் இருளின் வல்லமைகள் ஆலோசனை கர்த்தராகிய பரிசுத்த ஆவியானவரின் ஆளுகையிலிருந்து இவர்களை வெளியே கொண்டு போய்விடுகிறது.

 

ஒரு வாலிபன் இப்படியாக சொன்னான் Smart phone ஒரு Game ஐ ஒருவன் பார்க்கும் படி இவனை தூண்டியதாகவும் அதை விளையாடி முடித்து விட்டு தூங்கி விட்டதாகவும் ஆனால் இரவு திடீரென்று கண் விழித்த போது தன்னை அறியாமலே வீட்டை விட்டு ரொம்ப தூரம் கடந்து வந்ததை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும் பிறகு  ரொம்ப நாள்கள் இதே மாதிரி தொடர்ந்து நடந்ததாகவும் அதிர்ச்சியோடு சொன்னான். மற்றோருவர் ஒரு video ல் ஒரு  கதையை பார்த்த பிறகு அன்று இரவு தன்னுடைய ஆவி சொல்ல முடியாத அசிங்கமான அநுபவத்துக்குள் கொண்டு செல்லப்பட்டதாகவும் அடுத்த இரண்டு நாள்கள் தன்னால் எழும்ப முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் சொன்னார். அநேக internet game களில்  உள்ள இருளின் வல்லமைகள் அதை பார்ப்பவர்களின் ஆத்துமாக்களை சோர்வுக்குள்ளாக்கி  பாவம் செய்யவும் தற்கொலை செய்யவும் தூண்டுவதாகவும் மேலும் அநேக வாலிபர்கள் இதில் மாட்டி கொண்டு மீள முடியாமல் தவித்து கொண்டிருப்பதாகவும் இதை பற்றி நன்கறிந்த ஒருவர் சொன்னார். ஒரு வாலிப பெண் இத்தகைய வல்லமையினால் ஆளுகை செய்யப்பட்டு தன்னுடைய nude photo ஐ தன்னுடைய ஆண் நண்பர்களுக்கு பதிவிறக்கம் செய்ய தூண்ட பட்டதாகவும் மேலும் தன்னை ஏதோ ஒரு சக்தி ஆளுகை செய்து தன்னை ஏவி கொண்டிருந்ததாகவும் அடிக்கடி தனியாக பேச ஆரம்பித்ததாகவும் புரியாத படங்களை சுவரில் வரைந்து கொண்டிருந்ததாகவும் பிறகு ஒரு விடுதலை ஊழியத்தை செய்யும் ஊழியக்காரர் மூலமாக விடுதலை பெற்றதாகவும் குறிப்பிட்டாள். அநேக Cartoon ல் வரக்கூடிய உருவங்கள் வானமண்டலத்தில் உள்ள பொல்லாத ஆவிகளின் உருவத்தின் சாயலாக இருக்கிறது. மேலும் இதை பார்க்கும் சிறுவர்களின் இருதயத்தில் இச்சையும் முரட்டாட்டமும் கீழ்படியாமையும் விதைக்கப்படுகிறது.எனவே இந்த பொல்லாக அக்கினியாஸ்திரங்களிலிருந்து நம்முடைய வாலிபர்களும் சிறுபிள்ளைகளும் பாதுகாக்கப்பட ஜெபியுங்கள்.     (கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும், உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். லூக்கா 11-34)

அநேக வாலிப பெண் பிள்ளைகள் Internet மூலம் தவறானவர்களிடம் தொடர்பு கொண்டு அதனால் அவர்கள் வசியம் செய்யப்பட்டு கடைசியில் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இரவு நேரங்களில் எல்லாரும் தூங்கிய பிறகு internet ஐ பயன்படுத்துகிறவர்களை பிசாசானவன் ஏவாளை வஞ்சித்தது போல வஞ்சித்து கடைசியில் படுகுழியில் தள்ளி விடுகிறான். (மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். சங்கீதம் 119-37)

 

இன்றைக்கு அநேகர் internet ஐ தவறாக பயன்படுத்தி தங்கள் ஆவிக்குறிய காரியங்களில் உலர்ந்த கொடிகளை போல மாறி விட்டனர். எனவே நம்மை பாதாளத்துக்கு கொண்டு செல்லும்படியான சாத்தானின் தந்திரங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் Cell phone மூலமாக அதரிசனமானபொல்லாத ஆவிகளின் ஆளுகைகள் தீவிரித்து வருகிறது,நம்மை ஆளுகை செய்யும்படியாக கிரியை செய்கிற எந்த காரியத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.ஒரு வேளை இப்படிபட்ட அடிமைதனத்தில் நீங்கள் இருந்தால் உடனே பரிசுத்த ஆவியானவர் உதவியை நாடுங்கள்.அவர் உங்களுக்காக யுத்தம் செய்து உங்களை விடுவிப்பார். ( சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.

சங்கீதம் 143:3 கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும், உம்மைப் புகலிடமாகப் கொள்ளுகிறேன்.

சங்கீதம் 143:9 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன், உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.

சங்கீதம் 143:10

 

கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும், உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும். சங்கீதம் 143:11)

 

பிரியமான வாலிபர்களே அந்தகார இருள் உன்னை சூழ்ந்து கொள்ளாதபடி இடது புறமும் வலது புறமும் சாயாதபடி ஜாக்கிரதையாயிரு. வாலிப காலத்தில் உன் சிருஷ்டிகரை நினை,உன் சிந்தனைகளில் கூட அவர் மேல் அன்பு கூறு. உன் வாலிப நாள்களை அவருக்கு ஒப்பு கொடு.உன்னை தேவனிடத்திலிருந்து பிரிக்கும் படி சத்துரு கொண்டு வரும் எல்லாவித இச்சைகளுக்கு விலகி ஒடு.நீ தேவனுக்காக பிரித்தெடுக்கபட்ட ஆவிக்குறிய சந்ததி என்பதை மறந்துவிடாதே,எனவே ஆவியிலும் மாம்சத்திலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க உன்னை சுத்திகரித்து கொண்டு பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்து.தேவன் உனக்காக வைத்திருக்கும் தரிசனத்தையும் ஆசீர்வாதத்தையும் இழந்து விடாதே.  ஆமென்

bottom of page