top of page

வாலிபர் பகுதி

சகோ. அஷோர் 

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார் – பிலிப்பியர் 2:8

 

கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலகட்டத்தில் நன்மைச் செய்கிறவராகவே சுற்றித்திரிந்தார் என்பதை நாம் வேதத்தில் பார்க்கிறோம். அவர் செய்த அற்புத அடையாளங்களையும் கண்ட மக்கள் கூட்ட கூட்டமாக அவரை பின்தொடர ஆரம்பித்தனர். ஆனால் அந்த கூட்டத்தில் நடுவிலேயே அவரிடத்தில் குற்றத்தை கண்டுபிடிப்பதற்காகவே சிலர் சுற்றித்திருந்தனர்.

ஒரு குற்றமும் கண்டுபிடிக்க முடியாமல் அவர் மீது பொய்குற்றத்தை சுமத்தி அவரை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தனர். ஆனால் அவர் ஒருவார்த்தையும் சொல்லாமல் தம்மை முழுமையாக ஒப்புக் கொடுத்தார். அவரை சாட்டையினால் அடித்தும் தலையில் முள்மூடி சூட்டியும் கன்னத்தில் அறைந்து அவரை ஏளனமாய் பேசின போதிலும் மறுமொழியாக ஒருவார்த்தையும் சொல்லவில்லை.

மாறாக இயேசு கிறிஸ்து தம்முடைய பிதாவின் சித்தத்தை செய்ய ஒரு அடிக்கப்பட்ட ஆட்டிக்குட்டியைப் போல சிலுவையில் தொங்கினார். நம்முடைய பாவத்திற்காகவும் நம்முடைய அக்கிரமங்களுக்காகவும் அவர் அடிக்கப்பட்டார் என்று ஏசாயா அதிகாரத்தில் பார்க்கிறோம். இப்படியாக அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை முழுமையாக செய்து முடித்தார்.

சிலுவையில் அவரை ஒப்புக்கொடுத்த ஜனங்களுக்காக அந்த சூழ்னிலையிலும் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராக காணப்பட்டார் அதுமட்டுமல்லாமல் தம்மைச் சுற்றி நின்ற ஜனங்களுக்காக பரிதாபப்படுகிறவராக காணப்பட்டார் என்பதை நாம் அறிகிறோம்.

எனக்குப் பிரியமான ஜனங்களே நாம் ஒவ்வொரு வருடமும் இந்த நாளை நினைவு கூறுகிறோம். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் இந்த நாளில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த தியாகம் நம்மிடத்தில் வெளிப்படுகிறதா? என்பதை சிந்தித்து பார்ப்போம். விருதாகவாக இந்த நாளை மாமிசத்தில் சோகத்துடனும் அழுதும் அநுசரிப்பதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை இவைகள் எல்லாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் கிரியைகளில் வெளிப்பட வேண்டும் அப்பொழுதுதான் நாம் இந்த நாளை அநுசரிப்பதில் அதாவது நினைவு கூறுவதில் பிரயோஜனம் இருக்கும் என்று சொல்லி இந்த வார்த்தையை முடிக்கிறேன்.

தேவன் தாமே நம்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

bottom of page