top of page

தேவன் மேல் அன்பில்லாதவவர்கள்

 

இன்றைக்கு கல்வாரியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மீது வெளிப்படுத்திய அன்பை நாம் உணர்ந்து கொண்டிருப்போமென்றால் கண்டிப்பாக நாம் அவர் கட்டளைகளுக்கு கீழ்படிவோம்.இன்றைக்கு தேவாதி தேவன் நம்மீது கொண்ட அன்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருக்கிறபடியால் நாம் தேவனுடைய காரியங்களை அற்பணிப்போடு செய்யாமல் வெறும் கடமைக்காக செய்கிறோம். ( என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான், நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.  யோவான் 14:21)

 

தேவன் நம்மீது கொண்ட அன்பை நினைத்து அவரை நேசிக்கிறவன் சுயநலத்துக்காகவும் தன் பெயர் பிரஸ்தாபத்திற்க்காகவும் எதையும் செய்யமாட்டான். இன்றைக்கு அநேகர் இரட்சிக்கப்பட்ட நாள்களில் தேவனோடு கொண்டிருந்த அன்பை  இழந்து போனார்கள்.அநேகர் இந்த உலக ஆசை இச்சைகளை விரும்பி தேவனை விட்டு வெகுதூரம் போய் விட்டார்கள்.ஊழியக்காரர்களிடம் கூட அன்றைக்கு தேவனோடு கொண்டிருந்த ஜக்கியம் இன்றைக்கு  இல்லை. உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று வேதம் சொல்கிறது.இயேசு தன்னை பின்பற்றி வந்த சீஷர்களை குறித்து பிதாவோடு பேசும் போது  நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. என்று சாட்சி கொடுத்தார். இன்றைக்கு அநேகர் உலகத்தையும் தேவனையும் நேசிக்கும் மாயமால கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்று இயேசு சொன்னார். (லூக்கா 16-13).

 

இன்று ஊழியத்திலும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தேவனை விட உலக காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். தேவன் நமக்கு தந்த ஆசீர்வாதங்களின்  மேல் அன்பு கூர்ந்து தேவனை அசட்டை பண்ணுகிறோம். ஒரு பெண் தன்னை  கணவனோடு  வாழ்ந்து கொண்டு தன் இருதயத்தில் வேறோருவனை நேசிப்பது என்பது ஆவிக்குறிய விபச்சாரமாகும் இன்றைக்கு மணவாட்டியாகிய நாம் இதை தான் செய்து கொண்டிருக்கிறோம். ஞாயிற்று கிழமைகளில் நீர் மாத்திரம் போதும் என்று தேவனை ஆராதித்து விட்டு மற்ற நாள்களில் உலகத்தை நேசித்து கொண்டிருக்கிறோம்.ஆண்டவரோ ஆதியில் தேவன் மேல் கொண்ட அன்பை இழந்து போனதை குறையாக காண்கிறார். (நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 2:4-5)

 

நாம் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படியாமல் தேவனை நேசிக்கிறோம் என்று பொய் சொல்லி கொண்டிருக்கிறோம்,பொய்யர்கள் அனைவரும் அக்கினி கடலிலே தள்ளப்படுவார்கள் என்பதை குறித்து எச்சரிக்கையாக இருப்போம்.முன்பு தேவன் மேல் உள்ள அன்பினால் தாகத்தோடு அவர் பிரசனத்துக்காக காத்திருந்தோம்.அவர் மேல் கொண்ட அன்பினால் பல காரியங்களை வாஞ்சையோடு வைராக்கியத்தோடு  செய்த நாம் இன்றைக்கு வெறும் கடமைக்காக எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம்.மேலும் முழு  இருதயத்தோடு உன் தேவனிடத்தில் அன்பு கூறு என்று இயேசு சொன்னார்.ஆனால் நம் இருதயமோ தேவனை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது.தேவனிடத்தில் நாம் அன்பு கூறுவது என்பது அவர் கற்பனைகளை கைக்கொள்வதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது,.எனவே இன்றைக்கு நம்மை நிதானித்து அறிவோம்.( நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம். அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. 1 யோவான் 5 நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு. நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே. 2 யோவான் 1-6).

 

எனவே பிரியமானவர்களே இந்த கடைசி காலத்தில் தேவனை முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பெலத்தோடும் முழு சிந்தனையோடும் அன்பு கூறும்படியாக நம்மை அற்பணிப்போம். (இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். 
யோவான் 14:23) ஆமென்

bottom of page