ஜெப விண்ணப்பங்கள்
வேதம் சொல்லுகிறது, அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால் ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் – ரோமர் 8:26
1. ஓமன் தேசத்தில் இருக்கிற 48 லட்ச மக்களின் முழுமையான இரட்சிப்பிற்காக.
2. அனைத்து மத்திய கிழக்கு நாடுகளின் இரட்சிப்பிற்காக, நாடுகளின் பெயரை சொல்லி ஜெபிக்கவும் [ ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், இஸ்ரவேல், ஓமன், குவைத், கத்தார், பஹ்ரெய்ன், துருக்கி, எகிப்து, ஜோர்டான், லெபனான், பாலஸ்தீனம் ].
3. திருச்சபைகளின் அனைத்து உறுப்பினர்களும் இரட்சிப்பின் நிச்சயம் பெற.
4. சபைகளிலுள்ள போதகர்களையும் கர்த்தர் அக்கினி ஜீவாலையாய்ப் பயன்படுத்த.
5. சபைகளிலுள்ள எல்லார் மேலும் ஆவியானவர் ஊற்றப்பட.
6. சபைகளுக்குள் அன்பு ஐக்கியம் ஒருமனம் காணப்பட.
7. தேவப் பிள்ளைகள் ஜெப ஆவியால் ஆத்தும பாரத்தால் நிரப்பட சபைகள், வளர்ந்து பெருக.
8. இந்தியர்களை அடிமைப்படுத்துகிற விக்கிரக வல்லமைகளை இயேசுவின் நாமத்தில் கட்டுங்கள்.
9. சபைகளுக்கு விரோதமாய் எழும்பி பிரிவினைகளைக் கொண்டுவரும் சர்ப்பத்தின் ஆவியை அழித்து ஜெபியுங்கள்
10. விபச்சார, வேசித்தன் ஆவிகளைக் கட்டி ஜெபியுங்கள்.
11. மந்திர பில்லிசூனிய ஆவிகள் அழிக்கப்பட ஜெபியுங்கள்.
12. தேசத்தின் சமாதானத்தைக் கெடுக்க நினைக்கிற சாத்தானின் கிரியைகள் அழிக்கப்பட ஜெபியுங்கள்.
13. சிறுபிள்ளைகளின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் வாலிப பிள்ளைகள் வாலிப பிராயத்திலே சிருஷ்டிகரை தேடும்படியாக.
14. வேலையில்லாத் திண்டாட்டம் மாறும்படியாக.
15. ஆட்சியாளர்கள் உண்மையும் உத்தமுமாக ஆட்சி செய்யும்படியாக
ஜெபமே ஜெயம்
-------------------------------------------
ஜெபம் செய்யாமல் இருக்கிற ஒவ்வொருவரையும் பாவிகள் என்று வேதம் சொல்லுகிறது – 1சாமுவேல் 12:23
-
இஸ்ரவேல் தேசத்தை பிரிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிற எல்லா பிசாசின் திட்டங்களை கர்த்தர் உடைக்கும்படியாக ஜெபிக்கவும்
-
இந்திய தேசத்தில் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக அவிழ்த்துவிடப்பட்டிருக்கிற பொல்லாத கிரியைகள் மாறும்படியாக
-
இந்திய தேசத்தில் கானப்படுகிற சாதிப்பிரச்சனைகள் மாறும்படியாகவும், பல இடங்களில் தாழ்ந்த ஜாதி என்று சொல்லி ஜனங்களை மிருகத்தைப் போல நடத்துகின்ற அவல நிலைகள் மாறும்படியாக
-
அனைத்து தேசங்களிலும் வேதம் கிடைக்கவும் அதை ஜனங்கள் வாசித்து சத்தியத்தை அறியவும் ஜெபிக்கவும்
-
சவுதி தேசத்தில் சுவிசேஷத்திற்கான வாசல்கள் திறக்கும்படியாகவும் அந்த தேசத்தில் வல்லமையான ஊழியக்காரர்களை எழுப்பும்படியாகவும்
-
சபைகளை ஆளுகை செய்கிற பண பிசாசுகள் அழிந்துபோகும்படியாக
-
இன்றைய நாட்களில் கிறிஸ்தவ சபைகளில் காணப்படுகிற வேற்றுமையான உபதேசங்கள் மாறும்படியாக ஜெபிக்கவும் மற்றும் எல்லா சபைகளும் ஒரு சத்தியத்தின் கீழ் வரும்படியாக ஜெபிக்கவும்
-
எல்லா சபைகளிலும் முழு இரவு ஜெபங்கள் நடைபெறும்படியாக
-
ஜாதி அடிப்படையில் நடந்து கொண்டிருக்கிற சபைகள் மனம் மாறும்படியாக
-
கடன்பிரச்சனைகள், நல்ல வேலையில்லாதவர்கள், பிசாசின் போராட்டங்கள், திருமணமாகாதவர்கள், நோயினால் கஷ்டப்படுகிறவர்கள், பிள்ளைகள் இல்லாதவர்கள், திருடர்கள், விபச்சாரக்காரர்கள், கல்வி கற்க முடியாதவர்கள், இரட்சிக்கப்படாதவர்கள், சாபத்தில் இருக்கிறவர்கள், கள்ளப் போதகர்கள், அன்பில்லாதவர்கள், உணவுக்காக கஷ்டப்படுகிறவர்கள், வீடு இல்லாதவர்கள், கைவிடப்பட்டவர்கள் – இவர்களுக்காக ஜெபிக்கவும்
-
வளைகுடா நாடுகளில் செயல்படுகிற அநியாயமான நியமங்கள் மாறும்படியாக
-
பரிசுத்த வாழ்க்கைக்காக ஜெபிக்கவும் ஏனென்றால் கர்த்தரின் வருகையின் போது அனைவரும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்
-
பாரம்பரிய சபைகளை ஆளுகை செய்கிற மனுஷருடைய கொள்கைகள் மாறும்படியாக
-
சிறு பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் அவர்கள் கர்த்தருக்குள் வளர்க்கப்படவும் ஜெபிக்கவும்
-
ஓமான் தேசம் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்படியாக அதற்காக இங்கு செயல்படுகின்ற சபைகள் ஒன்று சேர்ந்து ஜெபிக்கவும்
-
ஓமான் தேசத்தில் வேலை செய்கிற அனேக பிள்ளைகளுடைய SETTLEMENT கள் அநியாயமாய் பறிக்கப்படுவதை கர்த்தர் தடை செய்யும்படியாக ஜெபிக்கவும்
---------------------------------
கர்த்தரைத் தேடுகிறவர்களா சகலத்தையும் அறிவார்கள் – நீதி 28:5
-
ஆடம்பர மற்றும் ஆபாசமான ஊழியங்கள் மாறும்படியாக.
-
ஊழியம் என்ற பெயரில் நடக்கும் வியாபாரங்கள் மாறும்படியாக.
-
வேதத்தில் சொல்லப்படாத காரியங்களை பேசும் ஜனங்கள் மனந்திரும்பும்படியாக
-
பணத்தின் அடிப்படையில் நடக்கும் ஊழியங்கள் மாறும்படியாக.
-
விசுவாசிகளின் பேராசைகள் மாறும்படியாக.
-
உலக ஆசீர்வாதத்திற்காக மட்டும் இயேசுவைத் தேடி ஓடுகிற ஜனங்கள் மனந்திரும்பும்படியாக.
-
முழு நேர ஜெபங்கள் சபைகளில் அதிகமாக நடைபெறும் படியாக.
-
சத்தியம் இல்லாத சபைகளை தேவன் சந்திக்கும்படியாக.
-
தேவனுடைய சித்தத்தின் அடிப்படையில் சபைகள் மற்றும் ஊழியங்கள் நடைபெறும்படியாக
-
ஊழியத்திற்காக மட்டும் ஜெபிக்கிற பிள்ளைகள் எழும்பும்படியாக.
-
முதலில் கிறிஸ்தவர்களின் மத்தியில் எழுப்புதல் உண்டாவதற்காக ஜெபிக்கவும்
-
ஆத்துமா ஆதாயத்திற்காக ஓடுகிற பிள்ளைகள் அதிகமாக எழும்பும்படியாக [ முதலில் ஆத்துமா ஆதாயம் நம்முடைய குடும்பங்களில் மற்றும் சபைகளில் நடைபெற வேண்டும் ]
குறிப்பு:
மேலே சொல்லப்பட்ட காரியங்களில் மாற்றம் உண்டானால் மாத்திரமே நாம் மற்ற காரியங்களுக்காக ஜெபிக்க முடியும். கிறிஸ்தவர்கள் மத்தியில் எழுப்புதல் இல்லாத போது எப்படி புறஜாதிகளிடத்தில் எழுப்புதலைக் கொண்டு வர முடியும்.