top of page

தீவிரிக்கும் வஞ்சிக்கிற ஆவிகளின் உபதேசம்

ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். 1 தீமோத்தேயு 4:1.

இந்த கடைசிகால எழுப்புதலுக்கு எதிராக சாத்தான் கொண்டு வரும் ஆயுதம் கள்ள உபதேசம்.இன்றைய சபை போதகர்களுக்கு இதை பற்றிய பகுத்தறிதலோ வெளிப்பாடோ இல்லாத காரணத்தால் வஞ்சிக்கும் உபதேசத்தை பரப்பும் ஆட்டு தோலை போர்த்திய ஓநாய்கள் சபைகளுக்குள்ளே நுழைந்து ஜனங்களின் விசுவாசத்தை திசை திருப்புகின்றனர்.இதுவரைக்கும் கேள்விப்படாத மாறுபாடான உபதேசங்கள் பிரசங்க பீடத்தை அசுசிபடுத்தும் ஆட்டங்கள் பாட்டங்கள் சபைகளை ஆளுகை செய்ய ஆரம்பிக்கின்றன.  சத்தியத்திற்கு கீழ்படியாதபடிக்குவஞ்சிக்கிற ஆவிகளினால் ஆளுகை செய்யப்பட்ட அநேகர் வேதாமத்தை புரட்டும்படிக்கு தவறான உபதேசங்களை போதிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் வேத வசனங்களை சரியாக அழகாக பேசி கடைசியில் வஞ்சிக்கப்பட்ட அதாவது கள்ள உபதேசத்தை திணிக்கின்றனர். இவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால் நீங்கள்  ஒரு முறை இதை ஏற்று கொண்டால் நீங்கள் வஞ்சிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டு மீண்டு வர முடியாத நிலை ஏற்படும். அதுமாத்திரமல்ல இத்தகய உபதேசங்கள் உங்களை நரகத்தின் வாசலுக்குள் கொண்டு சென்றுவிடும். பவுல் இதை பற்றி தெளிவாக எழுதுகிறார். (அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். ரோமர் 16-17.

 

எனவே நீங்கள் கற்று கொண்டு பின்பற்றி வருகிற உபதேசத்துக்கு விரோதமாக மாறுபாடான உபதேசங்களை பேசுகிறவர்களை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.பெரும்பாலான கள்ள போதகங்கள் அமெரிக்க தேசத்தில் இருந்து பரப்பபடுகிறது.அவைகளை பரப்புவதற்கு ஏராளமான பணம் செலவிடப்படுகிறது. கடைசி காலத்தில் கள்ள போதகர்கள் உங்களிடத்தில் இருப்பார்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.பெரும்பாலான கள்ள போதகங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கர்த்ததுவத்துக்கு எதிராகவும் நாம் ஏற்று கொண்ட வேதாகமத்தின் அடிப்படை சத்தியமான திரித்துவ தெய்வீக முப்பரிமாணத்துக்கு  விரோதமாகவும் சாத்தானால் ஏவி விடப்படுகிறது. 

வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:6-9.

மேலும் கலாத்தியர் 1-11,12 ல் என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியல்ல,அதை ஒரு மனுஷனால் பெற்றதுமல்ல. கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார், என்று பவுல் எழுதுகிறார். இன்றைக்கு  வேதாகமத்தை எடுத்து பிரசங்கிக்கின்றவர்களில் பலர் வேத வசனங்களை பரிசுத்த ஆவியானவரின் உதவியில்லாமல் தங்கள் சுய அறிவினாலே வியாக்கியானம் செய்து ஜனங்களுக்கு போதித்து ஜனங்களை குழப்பி விடுகின்றனர். அடுத்ததாக பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு கள்ள போதகங்களை போதிக்கிறவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களையே குறி வைத்து வருகிறார்கள். இவர்கள் ஆத்தும ஆதாயம் செய்வதில்லை.இவர்கள் சில வசனங்களை சொல்லி பதில் சொல்ல முடியாத சில கேள்விகளை கேட்டு ஜனங்களை மூளை சலவை செய்கின்றனர், அதுமாத்திரமல்ல இவர்கள் சதாகாலமும் வாக்குவாதம் செய்து மூன்று நான்கு வசனங்களை வைத்து முழு வேதாகமத்தையே புரட்டுகின்றனர். (ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான். அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,  கெட்டசிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. 1 தீமோத்தேயு6:3-5.

 

கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் (கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 பேதுரு 2-1.

 

அடுத்ததாக அந்தி கிறிஸ்துவின் ஆவியை உடையவர்கள்.இவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கர்த்தத்துவத்தையோ அல்லது பிதாவின் தெய்வீகத்தையோ மறுதலிக்கிறவர்கள்.(இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 1 யோவான் 2:22.

(ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்குக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும்,(பிதா) நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. யூதா 1:4.

இப்படி வஞ்சிக்கப்பட்ட கள்ள உபதேசத்தை உருவாக்கினவர்கள் கடைசியில் வீழ்ச்சியடைந்து போனதாக சரித்திரம் சொல்கிறது, மேலும் வேதாகமத்தை புரட்டி ஜனங்களை வஞ்சித்த அநேகர் தேவனால் நியாயம் தீர்க்கபட்டிருக்கிறார்கள்.மேலும் வேதாகமத்துக்கு புறம்பாக சத்தியத்தை புரட்டுகிறவர்கள் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்கள் என்று வேதம் எச்சரிக்கிறது. எனவே இந்த கடைசி காலத்தில் ஊழியக்காரர்களும் சபை போதகர்களும் இத்தகய கள்ள போதகத்தை குறித்து மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

 

சபை போதகர்களே முதலாவதாக கள்ள உபதேசங்களை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.அப்பொழுது தான் ஆட்டு தோலை போர்த்திய ஓநாய்களிடமிருந்து உங்கள் சபை ஜனங்களை பாதுகாக்க முடியும். சபை ஜனங்கள் புதிதாக அறிமுகம் இல்லாதவர்களினால் ஆரம்பிக்கப்படும் எந்தவிதமான Bible study மற்றும் Bible short course போன்றவற்றை தவிர்த்து விடவேண்டும்.ஏனென்றால் அனேக நகரங்களில்  இலவசமாக பகுதி நேர வேதாகம கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு இலவசமாக போதிக்கிறார்கள்.அநேகர் ஆர்வ மிகுதியினால் இங்கு சேர்ந்து கடைசியில் மூளை சலவை செய்யப்பட்டு வஞ்சிக்கப்படுகிறார்கள். வெளியூர்களில் தங்கி படிக்கும் உங்கள் பிள்ளைகளிடம்  சபைக்கு போவதற்கு முன் சபையை பற்றி சரியாக விசாரிக்க சொல்லுங்கள்.ஒரு வேளை உங்கள் பிள்ளைகள் வஞ்சிக்கப்பட்ட அவர்களது நண்பர்களால் சாத்தான் சபைக்கு கூட வழி நடத்தப்படலாம்.யஹோவா சாட்சிகள்,Jesus only,பாவம் செய்யலாம் என்ற கிருபையின் உபதேசம்,சாத்தான் சபைகள்,கிறிஸ்லாம் மேலும் ஆண்டவராகிய இயேசு சொன்ன கட்டளைகளை மறுதலிக்கும் சபைகள் மற்றும் உபதேசங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க சொல்லுங்கள். வேதாகமத்தை பற்றிய சிக்கலான கேள்விகளுக்கு முதிர்ந்த ஊழியக்காரர்களிடம் விளக்கம் கேளுங்கள்.  வேதாகமத்திலுள்ள புரியாத காரியங்களுக்குதேவ சமூகத்தில் காத்திருந்து பரிசுத்த ஆவியானவரிடம் விளக்கம் கேளுங்கள். (நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 1 யோவான் 2-27)

(வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. தீத்து 3-10)

 

வேதாகமம் நமக்கு சொல்லும் ஆலோசனை என்னவென்றால்  வேதாகமத்தை புரட்டுகிறவர்களை விட்டு விலகு என்பதே.எனவே இத்தகய வஞ்சிக்கும் உபதேசத்தை போதிக்கிறவர்களை விட்டு உடனடியாக  விலகுங்கள்.குறிப்பாக உங்கள் வாலிபர்களை பாதுகாத்து கொள்ளுங்கள், தெய்வத்துவத்தின் ரகசியங்களையும் வேதாகமத்தின் ஆழங்களையும் நம்மால் ஆராய்ந்து அறிய முடியாது.மனிதனின் படைப்புக்கு முந்தின காரியங்களும்,நித்தியத்துக்கு பிறகுள்ள காரியங்களும் வேதாகமத்தில் தெளிவாக சொல்லப்படவில்லை.வேதாகமத்தில் சொல்லப்படாத அநேக ரகசியங்கள் இருக்கிறது, பதில் சொல்ல முடியாத விடை தெரியாத கேள்விகள் இருக்கிறது.

 

மறைவானவைகள் கர்த்தருக்கே உரியது என்று வேதம் சொல்கிறது.ஒருவன் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னால் அவன் அறிய வேண்டிய பிரகாரம் ஒன்றையும் இன்னும் அறியவில்லை என்று வேதம் குறிப்பிடுகிறது.வேதாகம வசனத்தின் ஆழங்கள்  உங்களுக்கு தெரியவில்லையென்றால் தயவு செய்து தெரியாது என்று சொல்லி விடுங்கள்.எதையும் கூட்டியோ குறைத்தோ உங்கள் சுய அறிவினால் விமர்சித்தோ எதையும் சொல்லாதிருங்கள்.பரிசுத்தாவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதாகமத்தின் எல்லா காரியங்களையும் நிகழ்வுகளையும் விசுவாசியுங்கள்.எதையும் கூட்டியோ குறைத்தோ சொல்லாதீர்கள்.ஏனென்றால் வானமும் பூமியும் ஒளிந்து போகும்.தேவனுடைய வார்த்தைகள் ஒளிந்து போவதில்லை.( இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.  வெளிப்படுத்தின விசேஷம் 22:18-19

(தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக. பிரசங்கி 5-2. ஆமென்.

bottom of page