
நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள் யோவான் 8-24.
இந்த வசனத்தில் இயேசு நானே அவர் அதாவது நீங்கள் எதிர்பார்த்திருக்கிற மேசியா அதாவது இரட்சகர் என்பதாக கூறுகிறார்.கிழே உள்ள வசனங்களில் என்னை அனுப்பினவர்(பிதாவாகிய தேவன்)சத்தியமுள்ளவர் நான் அவரிடத்தில் கேட்டவைகளை உலகத்துக்கு சொல்கிறேன் என்றார்.என்னையல்லாமல் ஒருவனும் பிதாவிடத்தில் வரமுடியாது.நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றார்.யோவான் 16-30-31 ல் சீஷர்கள் அவரை நோக்கி நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம், இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். என்றார்
இயேசு தேவனிடத்திலிருந்தார் தேவனாயிருந்தார்.அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.* என்று யோவான் 1-1,2 வசனங்களில் படிக்கிறோம்.நம்மை இரட்சிப்பதற்காகவே பிதாவானவர் அவரை உலகத்துக்கு அனுப்பினார். (தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3-16.)
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.யோவான் 4:25-26.
இயேசு கிறிஸ்து தன்னை மேசியா அதாவது நானே அவர் என்றார்.22 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து விலைமதிக்கமுடியாத இரட்சிப்பை சிலுவையில் பெற்று தந்தார்.அவரை விசுவாசியாதவர்கள் பாவமன்னிப்பை பெற்று கொள்ளமுடியாது.அவர்கள் தங்கள் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தில் பங்கடைவார்கள்.அதனால் தான் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்றார்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். இனி அவர் உலகத்தை நியாயம் தீர்க்க வர போகிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். யோவான் 5-23. காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.கலாத்தியர் 4-5.
அப்போஸ்தலர் 8 ம் அதிகாரத்தில் எத்தியோபியா மந்திரி எசாயா ஆகமத்தை வாசித்து கொண்டு இரதத்தில் போய் கொண்டிருந்த போது பரிசுத்த ஆவியானவர் பிலிப்பிடம் நீ போய் அந்த இரதத்துடன் சேர்ந்து கொள் என்று சொன்னவுடன் பிலிப்பு ஓடி போய் அவனோடு சேர்ந்து இயேசுவை குறித்து அவனுக்கு பிரசங்கித்தான். இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி; இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.
அதற்குப் பிலிப்பு; நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்; இயேசுகிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.
அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரியும் அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான். இது தான் இரட்சிப்பின் வழி நடத்துதல்.
இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று கொண்ட இந்த இரட்சிப்பின் சத்தியத்துக்கு நாம் எல்லாரும் கண்டிப்பாக கீழ்படிய வேண்டும். (பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். 1 யோவான் 4:14,15)
(அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை அப்போஸ்தலர் 4:12)அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12.
ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார். அப்போஸ்தலர் 2:36.
(அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர் 2:8-11).
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். யோவான் 17:3. (இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 1 யோவான் 2:22)
இன்றைக்கு அநேகர் இயேசுவை அறிந்திருக்கிறார்கள்.ஆனால் இரட்சிப்பை பெற்று கொள்ளவில்லை.அவர் கீழ்படிய சொன்ன கட்டளைகளை மறுதலிக்கிறார்கள்.அதாவது அவர் கீழ்படிய சொன்ன சத்தியங்களுக்கு செவி கொடுப்பதில்லை.அவரது மாதிரியை மேலும் அவரது அடிச்சுவடை பின்பற்றி நடப்பதில்லை. அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும் அவரது கற்பனைகளை கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான்.அவனுக்குள் சத்தியமில்லை என்று 1 யோவான் 2-4ல் சொல்லப்பட்டிருக்கிறது.மேலும் சத்தியத்துக்கு கீழ்படியாத பொய்யர்கள் அனைவரும் அக்கினி கடலிலே தள்ளப்படுவார்கள் என்று வெளி 21-8 ல் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவர் சிலுவையில் பெற்று தந்த விலை மதிக்க முடியாத இரட்சிப்பை பெற்று கொள்ளுங்கள். (குமாரனாகிய அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.கொலோசெயர் 1-14).
அப்போஸ்தலர் 16 ம் அதிகாரம் 13,15 ம் வசனங்களில் பவுல் பிரசங்கம் பண்ணி கொண்டிருந்ததை லீதியாள் என்ற பெண் கேட்டு கொண்டிருந்தாள்.பவுல் சொல்லியவைகளை கவனிக்கும் படி கர்த்தர் அவள் இருதயத்தை திறந்தார்.அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.வேதாகமத்தை படிக்கும் போது அதை உணர்ந்து அதற்கு செவி கொடுக்கும் படி தேவன் உங்கள் இருதயத்தை திறக்கும்படியாக ஜெபியுங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.- அப்போஸ்தலர் 16-31 ஆமென்.