top of page

கள்ள தீர்க்கதரிசனம் உரைத்தவர்களை விட்டு விலகி செல்லுங்கள்.

 

 

வேதாகமத்தில் தங்கள் சொந்த ஆவியினாலே தீர்க்கதரிசனம் உரைத்த காரியங்களும் பொய்யின் ஆவியினாலே தீர்க்கதரிசனம் உரைத்த காரியங்களும்,குறி சொல்கிற ஆவியினாலே  தீர்க்கதரிசனம் உரைத்த காரியங்களும் சொல்லப்பட்டிருக்கிறது கர்த்தர் அவர்களை என் நாமத்தை கொண்டு பொய்யாய் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள் நான் அவர்களை அனுப்பவே இல்லை என்று சொல்வதைப் பார்க்கலாம்.

 

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களோடே பேசினதுமில்லை, அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள். எரேமியா 14:14

 

அப்போஸ்தலர் 11 வது அதிகாரம் 27 28 வது வசனத்தில் அந்நாள்களில் எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள் அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவரால் அறிவித்தான் அது அப்படியே கிலவுதியு ராஜனுடைய நாள்களில் உண்டாயிற்று.

 

அநேக தீர்க்கதரிசிகள்  எருசலேமுக்கு வந்தார்கள் அப்பொழுது ஒருவன் தீர்க்கதரிசனம் உழைக்கிறான் அவன் தானாக தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை.பரிசுத்த ஆவியானவராலே ஒரு பெரிய ஒரு கொடிய பஞ்சம் வரப்போகிறது என்றான். தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.  2 பேதுரு 1-21

 

தீர்க்கதரிசனம் இல்லாத ஊழியம் சீர்கெட்டுப் போகும் என்று வேதம் சொல்கிறது தீர்க்கதரிசனத்தை அற்பமாய் எண்ணாதீர்கள் என்று வேதம் சொல்கிறது.  ஆனால் கள்ள தீர்க்கதரிசனம் இருக்கும் ஊழியமும் சீர்கெட்டு போய்விடும். இன்றைக்கு  கள்ள தீர்க்கதரிசனத்தால் தவறான முடிவுகளை எடுத்து தேவ சித்தத்தை விட்டு விலகி ஆசீர்வாதத்தை இழந்தவர்கள் அநேகர்.

2018 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி அநேகர் ஆட்சி மாற்றம் வரும் என்றார்கள். ஆனால் எல்லாம் எதிர்மாறாக நடந்தது.ஆனாலும் தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசிகள் நடக்க போவதை தெளிவாக சொன்னார்கள். அது அப்படியே நடந்தது. அவர்கள் இணையதளத்தில் எதையும் பதிவிடமாட்டார்கள்.

 

மேலும்,  தங்களை தாங்களே உயர்த்தி கொள்ள மாட்டார்கள்.ஏனென்றால்  அவர்கள் மனத்தாழ்மையை உடையவர்கள்.கனிகளினால் கள்ள தீர்க்கதரிசிகளையும் கள்ள போதகர்களையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

 

2019 ஆவது ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அநேகர் மீண்டுமாய் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். இந்தியா செழிக்கும் அமெரிக்கா செழிக்கும்.  பிசினஸ் எல்லாம் வளரும் என்றும் செழிப்பின் ஆண்டு, ஆசீர்வாதத்தின் ஆண்டு, என்று தேசங்களுக்கெல்லாம் செழிப்பையும் ஆசீர்வாதத்தையும் வாரி வழங்கினார்கள். ஆனால் 2020 ஆண்டிலேயே எல்லாம் எதிர்மறையாக நடந்தது.இப்பொழுது தீர்க்கதரிசனம் சொன்ன ஒருவரையும் காணவில்லை. இனி 2020 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி என்ன சொல்ல போகிறார்கள் என்று தெரியவில்லை.

இவர்களது இணையதளத்தில் போய் பாருங்கள்.2018 மற்றும் 2017 ஆண்டுகள் மேலும் அதற்கு முந்திய புது வருட ஆராதனையின் பதிவுகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன.ஆனால் 2019 ல் டிசம்பர் 31 ம் தேதி 2020 ம் வருடத்தை பற்றி சொல்லப்பட்ட காரியங்களை Remove செய்து விட்டார்கள். இவர்கள் ஜனங்களை ஏமாற்றலாம்.ஆனால் தேவனை ஒருகாலும் ஏமாற்ற முடியாது.

 

இவர்கள் பெருமையினால் தீர்க்கதரிசிகளாக தங்களை உயர்த்தி கொண்டு பதிவிட்ட காரியங்களை அநேக புறஜாதி ஜனங்கள் கிண்டல் செய்து பரியாசம் செய்து இணையதளத்தில் பதிவிடுகிறார்கள்.

இதனால் அநேகர் இடறலடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை தான்.இவர்களை உங்கள் ஊழியங்களில் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.  ஏனென்றால் இவர்களால் இயேசுவின் நாமம் தூசிக்கப்படுகிறது.

 

உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள், அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள், கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 23:16

 

அவர்கள் என்னை அசட்டை பண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்புவராதென்றும் சொல்லுகிறார்கள். எரேமியா 23:17

 

பொய்யாய் தீர்க்கதரிசனம் சொன்ன இவர்களை ஏன் உங்களால் பகுத்தறிய முடியவில்லை.இத்தகயவர்களை ஏன் இன்னமும் ஊழியக்காரர்கள் தங்கள் ஊழியங்களில் பயன்படுத்துகிறார்கள்?

இவ்வளவு நடந்த பின்பு ஜனங்கள் இவர்களை தலையில் வைத்து ஆடுகிறார்கள், ஜனங்கள்  அறிவில்லாமல் சங்காரமாகிறார்கள்.

 

கடைசி நாள்களில் கள்ள போதகர்களும் கள்ள தீர்க்கதரிசிகளும் உங்களுக்குள் இருப்பார்கள் என்று இயேசு சொன்னதை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இந்த மாதிரி கள்ள தீர்க்கதரிசனம் உரைத்தவர்களின்  செய்திகளையும் கூட்டங்களையும் தயவுசெய்து புறக்கணியுங்கள் நீங்கள் தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபிக்க பழகிக்கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களோடு நிச்சயமாக பேசுவார் வரக்கூடிய காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். பரிசுத்த ஆவியானவர் வரும்போது வரக்கூடிய காரியங்களை அறிவிப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது  உங்கள் சபை ஊழியக்காரர்கள் நடத்தும் கூட்டங்களில்  கலந்து கொள்ளுங்கள். தேவன் உங்களோடு பேசும்படியாக நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறியும் படியாக தேவ சமூகத்தில் அதிக நேரம் காத்திருங்கள். இன்றைக்கும் உண்மையான கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் மறைந்திருத்து தங்களை உயர்த்தாமல் உண்மையும் உத்தமுமாய் ஊழியம் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ஜெபித்து தேவ ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.  ஆமென்.

 

சமாதானம் வரும் என்று தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்.  எரேமியா 28-9

bottom of page