top of page

சமீபத்தியபூமியதிர்ச்சிகள் உணர்த்துவது எதை?

Section Title

கடைசி கால நிகழ்வுகளும், மனிதர்களும்,கள்ள போதகங்களும் யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள், இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே, ஆனாலும், முடிவு உடனே வராது.  ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.  மத்தேயு 24:6,7

 

சமிபத்தில் நடந்த பூமியதிர்சிகளை வேதாகம தீர்க்கதரிசனங்களோடு ஒப்பிட்டு பார்த்தும் நாம் உணர்வடையவில்லை. இன்றைக்கு யுத்தங்களின் செய்திகளை கேட்கிறோம், தேசங்கள் ஆயுதங்களுக்காக பெருமளவு பணத்தை செலவிடுகிறார்கள். ஜனத்துக்கு விரோதமாக ஜனம். அநேக தேசங்களில் கலகங்கள், தீவிரவாத தாக்குதல்கள் 2020 ம் ஆண்டில் Covid என்கிற கொள்ளை நோய் உலகத்தையே அடைத்து போட்டது.

உலகெங்கிலும் பஞ்சம் என்கிற பொருளாதார சீர்குலைவு காணப்படுகிறது.அதன் விளைவாக தனி மனித வாழ்க்கையில் கூட பற்றாக்குறை, கடன் வாங்கும் சூழ்நிலைகள்.

 

கடைசி கால மனிதர்கள் எப்படி இருப்பார்கள் ? அவர்களின் சுபாவங்கள்?

 

மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.  எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும்,தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும்,நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,  சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்;இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. தீமோத்தேயு 3:1-5

 

இன்றைக்கு செய்திகளை பார்க்கும் போது வேதாகமத்தில் சொல்லப்பட்ட கொடிய நாள்களில் கொடிய மனிதர்களை பார்க்க  முடிகிறது.

 

ஊழியங்களில் கள்ள போதகர்கள்

 

அநேக கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள்.மத் 24.11

 

கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து,தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 பேதுரு 2-1

 

ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். மத்தேயு 24-24.

 

இன்றைக்கு ஜனங்களை ஈர்க்கும் படி தங்கள் ஊழியங்களை இணையத்தளத்தில் வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்தி கொள்ளும் பெருமையின் ஆவியை உடையவர்களை பகுத்தறியுங்கள்.

 

புதியதாக தீவிரித்து வரும் கள்ள போதகங்கள்

 

இது வரை நாம் பின்பற்றி வந்த பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் திரியேகத்தை மறுதலிக்கும்  Only jesus,Holy spirit only,Jahova witness மேலும், நீங்கள் கற்று கொண்ட சுவிசேஷத்துக்கு மாறாக புதியதாக எழும்பும்.

 

 கள்ள உபதேசங்கள்.

 

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.  நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

 

முன் சொன்னதுபோல?  மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.  கலாத்தியர் 1:6-9

 

எங்கு பார்த்தாலும் வேதப்புரட்டர்கள்,கள்ள உபதேசிகள் ,பணத்துக்காக ஊழியம் செய்கிறவர்கள்.பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயத்தீர்ப்பை குறித்தும் சபையை கண்டித்து உணர்த்தாத பிரசங்கிகள். அந்திகிறிஸ்துவின் போதனைகளை கொண்டு பிதாவையும் அல்லது இயேசுவையும் மறுதலிக்கும் வேதப்புரட்டர்கள்.

 

இந்த கடைசி நாள்களில் உண்மையான ஊழியக்காரர்களை போல நடித்து அதாவது ஆட்டு தோலை போர்த்திய ஓநாய்களை போல வசனத்தை அழகாக பேசி ஜனங்களை வஞ்சிக்கும் கள்ள உததேசிகளை விட்டு விலகி உங்களை காத்து கொள்ளுங்கள்.

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று  மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

1 யோவான் 2:22.   (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை(இயேசு), பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.1 யோவான் 5:7.

 

௧டைசி காலத்தில் வேதாகம அடிப்படை சத்தியத்தை புரட்டும் கள்ள உபதேசிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

 

எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.  1 யோவான் 1:3.

 

வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. தீத்து 3.

 

 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்து,வின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்;.  2 யோவான் 1:9

 

நாம் என்ன செய்ய வேண்டும்?

 

ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷ குமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் என்றார்.  லூக்கா 21-36. 

 

ஆமென்

bottom of page