கிறிஸ்த ு பிறப்பு
நல் வாழ்த்துக்கள்
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே, மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
தேவனோ இரக்கத்தில் ஜசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். எபேசியர் 2:3-5
தெய்வத்துவத்தின் பரிபூரணமான திட்டம் என்னவென்றால் எல்லா ஜனங்களும் சத்தியத்தை அறியும் அறிவை அடையவும் எல்லா ஜனமும் இரட்சிக்க படமும் அவருடைய சித்தமாய் இருக்கிறது.
அந்தகார வல்லமையான பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்து விடுதலையாகும்படி இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தார்.
ஆதியிலே அவர் தேவனோடு இருந்தார். அவர் தேவனாய் இருந்தார் அந்த வார்த்தை தேவனாய் இருந்தது. அவருக்குள் ஜீவன் இருந்தது அந்த ஜீவன் மனுஷனுக்கு ஒளியாயிருந்தது அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது. இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.அவர் உலகத்தில் இருந்தார் உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை. அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அல்லேலூயா
அவர் நம்முடைய பாவங்களுக்காக தன் ஜீவனை கொடுத்த போது இருளில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள். மரண இருளின் திசையில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் உதித்தது. இன்றைக்கு அந்த வெளிச்சத்தை நாம் பெற்றுக் கொண்டோமா என்பது தான் முக்கியம், அந்த ஜீவ ஒளியைபெற்றுக் கொள்ளாமல் வெறும் கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது பிரயோஜனமற்றது.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது நான் இந்த உலகத்துக்கு ஒளியாய் இருக்கிறேன் என்று சொன்னார். அவர் இந்த உலகத்தை விட்டுப் போகும்போது நீங்கள் இந்த உலகத்துக்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள் என்று சொல்லி விட்டு போயிருக்கிறார்.
அன்றைக்கு மந்தை மேய்ப்பர்களுக்கு தேவதூதர்களால் அறிவிக்கப்பட்ட "எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாகும் நற்செய்தி என்கிற காரியத்தை இன்றைக்கு நாம் இருளில் இருக்கும் ஜனங்களுக்கு சொல்ல வேண்டியது நம் மேல் விழுந்த கடமையா இருக்கிறது.
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு 1:21