top of page

ஊழியக்காரர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு என்ன கற்றுக் கொடுகிறீர்கள்?

 

உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள், உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.  ஏசாயா 54-13

 

அப்பிரயோஜனமான ஊழியக்காரனே!  என்று இயேசு கிறிஸ்து ஊழியம் செய்கிறவர்களை குறிப்பிட்டார். அப்படியிருக்க  ஊழியக்காரர்களுடைய பிள்ளைகள் சினிமா நட்சத்திரங்களை போல ஆராதனை மேடையில் வலம் வருகிறார்கள். ஆமாம், உன்மையை சொல்லுகிறேன், சினிமாவில் கதாநாயகன் நடனமாடுவது போல இவர்களும் அதேமாதிரி (சினிமா போன்ற) அசைவுகளோடு நடனமாடி தங்களையும் ஹுரோக்களாக காட்டி கொள்கிறார்கள். 

 

பிரசங்க மேடையில் சத்தியத்தை பேசின ஊழியக்காரர்கள், தங்கள் பிள்ளைகளை சரியான பாதையில் போதிக்க தவறி விட்டார்கள். மற்ற வாலிபர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஊழியக்காரர்களின் பிள்ளைகள் இணையதளங்களில் தங்கள் பளப்பளப்பான பணக்காரத்தனத்தையும்,  ஆராதனை என்ற பேரில் சினிமாத்தனத்தையும், வெளிப்படுத்துகிறார்கள்.

 

ஐயோ, மிகவேதனையோடு இதை சொல்லுகிறேன்…. இன்றைக்கு அநேக ஊழியக்காரர்களின் பிள்ளைகள் உலகத்தின் ஆவியினால் ஆளுகை செய்யப்பட்டிருக்கிறார்கள்.  இவர்களை சுற்றி ஒரு ரசிகர் மன்றமே இருக்கிறது.!!!!  சமூக வலைத்தளங்களில் இவர்களை அநேகர் பின்பற்றுகிறார்கள்.  இவர்கள் தங்கள் பதிவுகளையும் போட்டோக்களையும் போடும் போது அநேகர் இவர்களை புகழ்ந்து போற்றுகிறார்கள்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மகிமைபடுத்துவதற்கு பதிலாக யார் மகிமைபடுத்தப்படுகிறார்கள் என்பதை பாருங்கள்.?!

 

உங்கள் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்றைக்கு அநேக ஊழியக்காரர்களின் பிள்ளைகள் தங்களை உயர்த்தி கொள்கிற வீண் புகழ்ச்சியை விரும்புகிற கொடிதான பிசாசின் பெருமையின் ஆவியினால்  ஆளுகை செய்யப்பட்டிருக்கிறார்கள்!  இதை விட கொடுமை என்னவென்றால் வாலிபர்களை கிறிஸ்துவை நோக்கி திருப்ப வேண்டிய இவர்கள் தங்களை நோக்கி திருப்பி கொள்கிறார்கள்.  இது கொடிய வஞ்சிக்கிற உலகத்தின் ஆவியின் தந்திரம்.இவர்களை பின்புலத்திலிருந்து இயக்குகிறவன் யார் என்பதை பகுத்தறியுங்கள்!

 

இன்றைய கடைசி நாள்களில்  பிசாசின் தந்திரங்ளோடு நேரடியாக போரிடும்படியாய் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.  கடைசி கால யுத்த வீரர்கள் கடைசி கால ஜெப வீரர்கள் கடைசி கால தீர்க்கதரிசிகள் எங்கே.?பிசாசின் கிரியைகளை அழிப்பதற்காகவே தேவ குமாரன் வெளிப்பட்டார் என்று வேதம் சொல்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இருக்கும் போது பிசாசின் கிரியைகளை அழித்தார். அநேகரை பிசாசின் பிடியிலிருந்து விடுதலையாக்கினார்.  இயேசு கிறிஸ்துவின் சீஷர்களும்  இயேசுவின் அதே அடிச்சுவடை பின்பற்றினார்கள். அதே அழைப்பு தான் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும். ஆனால் இன்றைக்கு ஊழியக்காரர்கள் தங்கள் பிள்ளைகளை மேக்கப் போடவும் கேமரா முன்னாடி நிற்கவும் டான்ஸ் ஆடவும் பயிற்சி கொடுத்து தங்கள் பிள்ளைகளை கதாநாயகர்களாக உலகத்துக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

கடைசி காலத்தில் தேவன்  மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்றார்.  ஆனால் இவர்களோ வாலிபர்களை  உலகத்தின் ஆவியால் நிரப்புகிறார்கள்,  இவர்களுடைய பிள்ளைகள் தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபிப்பது இல்லை. பிசாசின் வல்லமைக்கு எதிராக யுத்தம் பண்ண வேண்டும் என்கிற நோக்கத்தை இவர்கள் எப்பொழுதோ மறந்து விட்டார்கள்.

 

தேவ ராஜ்ஜியம் கட்டப்படும்படி  ஜனங்கள் வைராக்கியமாக கொடுக்கும் காணிக்கை பணத்தை கொண்டு எராளமான பணத்தை செலவு செய்து ஆட்டம் பாட்டத்தோடு பளப்பளப்பாக சினிமாவை மிஞ்சும் அளவில் பாடல் CD க்களை வெளியிடுகிறார்கள்.

விசுவாசிகளே முதலாவது இந்த மாதிரி CD க்களை வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.

 

இவர்கள் சினிமா ஹீரோ மாதிரி தங்களை வெளிக் காட்டிக் கொண்டு தங்களை உயர்த்திக் கொண்டு கடைசியில் பெருமை என்கிற பிசாசின் கண்ணியில் விழுந்து தேவ சித்தத்தை விட்டு விலகி தேவ திட்டத்தையும் இழந்து இறுதியில் வீழ்ச்சியடைகிறார்கள். இதற்கு காரணம் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கும்  பெற்றோர்கள் தான். ஊழியக்காரர்களே உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் நீங்கள் விசுவாசிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளை  கர்த்தருக்கு பயப்படும் படி தாழ்மையோடு வளர்க்கவில்லையென்றால் உங்கள் பிரதான பணியில் தோற்று விட்டீர்கள். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம். பக்தியுள்ள சந்ததியை உருவாக்க தேவன் உங்களுக்கு  பிள்ளைகளை கொடுத்திருக்கிறார்.

உலகத்தால் கறைப்படாதபடிக்கு தங்களை காத்து கொள்வதே மாசில்லாத உண்மையான தேவபக்தி. ஏழைகள் கொடுக்கும் காணிக்கை பணத்தில் சினிமா காரனை போல விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு மேடையில் ஆடி பாடி கொண்டு வாலிபர்களை கவர்ந்து கொள்ள உங்களுக்கு தேவன் பிள்ளைகளை கொடுக்கவில்லை.

உங்கள் பணக்காரத்தனத்தையும் உங்கள் வாழ்வின் மிகுந்த ஆடம்பரத்தையும் காட்ட தேவன் உங்களை ஆசீர்வதிக்கவில்லை.

மேலும் உங்கள் பிள்ளைகள் மூலம் அநேக வாலிபர்கள் சிருஷ்டிகரை நினைப்பதை விட்டு விட்டு உலகத்துக்கு நேராக திருப்பபடுகிறார்கள். இதற்கு நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தான் பொறுப்பு.

bottom of page