top of page

நடனமாடி தேவனை துதிப்பது சினிமா பாணியா??

 

தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள், யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150

 

அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.
சங்கீதம் 149-31 தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப்பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான். 2 சாமுவேல் 6-4.


தாவீது ராஜா முழு பெலத்தோடு குதித்து நடனமாடினான் என்று வேதத்தில் பார்க்கிறோம். இசையோடும் நடனத்தோடும் தேவனை துதியுங்கள் என்று வேதம் சொல்கிறது. தேவ பிரசனத்தில் சந்தோஷத்தினால் அநேக தேசங்களில் தேவ பிள்ளைகள் தங்களை மறந்து நடனமாடி தேவனை ஆராதிக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு சில பிரசங்கிகள் நடனமாடுவதை சினிமாவுக்கு ஒப்பிட்டு தவறாக பேசுகிறார்கள். முதலாவதாக இந்த பிரசங்கிகள் ஏன் சினிமா பார்க்கிறார்கள்.

 

இவர்கள் சினிமா பார்ப்பதினால் இது சினிமா பாணி என்கிறார்களோ?இவர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.இது தமிழர் பாணி. கிராம புறங்களிலிருந்து வந்த பாணி. இசையோடு ஆரவாரத்தோடு சத்ததோடு சந்தோஷத்தோடு தேவனை ஆராதிப்பதில் என்ன தவறு இருக்கிறது.ஒரு பாடலுக்கு தேவபிரசனத்தில் நிறைந்து சந்தோசத்தோடு துள்ளி குதித்து நம்ம பெர்க்மான்ஸ் ஜயா நடனமாடுவதை பார்த்தேன். என்ன சந்தோஷம்.என்ன மகிழ்ச்சி. ஆனால் அதே பாடலுக்கு அதே பாணியில் நல்ல உடையணிந்து ஒரு இளைஞன் நடனமாடினால் இவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. உடனே இது சினிமா பாணி பிசாசு உள்ளே வந்து விட்டான் என்று புலம்புகிறார்கள்.இப்படி சதாகாலமும் அநேகரை குறை சொல்லி வம்புக்கு இழுத்து கொண்டிருக்கிற இவர்களிடம் தான் பிசாசு இருக்கிறான் முதலாவது அந்த பிசாசை விரட்டுங்கள்,(சகோதரர் மேல் குற்றம் சுமத்தும் பிசாசு -வெளி 12-10)சினிமா பாணியில்லாமல் எப்படி நடனமாடவேண்டுமென்று சொல்லுங்கள். நீங்கள் நடமாடுகிற பாணியை சினிமாவிலிருந்து  எடுத்து காட்டி விடுவார்கள்.

 

பஞ்சாப்பிகள் எப்படி நடனமாடி தேவனை ஆராதிக்கிறார்கள். பிற இனத்தார் பிற தேசத்தார் எப்படியெல்லாம் நடனமாடி தேவனை துதிக்கிறார்கள் என்று பாருங்கள். தமிழ் இளைஞர்கள் நடனமாடினால் அது பாவம் என்றும் மேலும் தங்களை பரிசுத்தவான்கள் என்று  சொல்லி கொள்ளும் ஆவிக்குறிய பெருமையுள்ள  இத்தகய மார்க்க பிரசங்கிகள் மனம் திரும்ப ஜெபியுங்கள் ஒரு குறிப்பிட்ட நபரின் புகைப்படத்தையோ அல்லது அவரது வீடியோ  வையோ சினிமா clips வுடன் Edit பண்ணி இணையதளத்தில் வெளியிட்டு அவரை தரக்குறைவாக அநேகர் விமர்சனம் செய்வது மிகவும் கீழ்த்தரமான செயல். தேவன் இப்படி செய்வதை நிச்சயம் அனுமதிக்கமாட்டார்.ஒருவர் தவறு செய்தால் அவரை கூப்பிட்டு செய்த தவறை உணர்த்துங்கள். மேடையில் நின்று கொண்டோ அல்லது இணையதளத்திலோ அவர் பேரை சொல்லி தரக்குறைவாக பேசி நியாயம் தீர்க்காதீர்கள். நாம் அரசியல்வாதிகள் அல்ல. உங்கள் மனைவி பிள்ளைகள் அல்லது உங்கள் குடும்பத்தார் தவறு செய்தால் இப்படி இணையதளத்தில் அவர்களை தூசித்து கேவலப்படுத்துவீர்களா உங்கள் கண்களில் உத்தரத்தை வைத்து கொண்டு பிறர் கண்களில் உள்ள தூசியை எடுத்து போட வகை தேடும் நீங்கள் தேவனுக்கு முன்பாக கறையற்றவர்களாகவும் பிழையற்றவர்களாகவும் இருந்து தேவ சித்தத்தின் படி ஊழியம் செய்கிறீர்களா?உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று தேவன் உங்களை பார்த்து சொல்வாரா?அப்படி இருந்தால் மாத்திரமே பிறரை கண்டித்து உணர்த்துங்கள்.

 

இளைஞர்கள் வேகமாக தான் நடனமாடுவார்கள். இளைஞர்களும் நடனமாடும் போது பக்தி விருத்திக்காக நடனமாட வேண்டும். தங்கள் எல்லையை மீறாமல் ஒழுங்கையும் பரிசுத்ததையும் காத்து கொள்ள வேண்டும்.தேவ பிரசனத்தில் நடனமாடுவதற்க்கும் சினிமாவில் நடனமாடுவதற்க்கும் வித்தியாசம் உண்டு.  நாம் உலகத்தார்கள் அல்ல. தேவனுடைய ராஜ்ஜியத்துக்காக அழைக்கப்பட்டவர்கள். எனவே நம் நடன அசைவுகளிலோ ஆராதனைகளிலோ,பாடல்களிலோ  உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்காதீர்கள்.உங்களை மேன்மை படுத்தாமல் தேவநாமம் மகிமைப்படும்படியாக மாத்திரம் தேவனை ஆராதியுங்கள், பயத்தோடும் நடுக்கத்தோடும் தேவ சமூகத்தில் காணப்படுங்கள்.  நடனமாடி துதிக்கும் போது பரிசுத்தத்திற்க்கு விரோதமாக எந்த ஒரு காரியமும் வெளிப்பட கூடாது.வெறும் பொழுது போக்குக்காக செய்யாமல் உண்மையும் உத்தமுமாக ஒழுங்கும் கிரமமுமாக தேவனை மகிமைபடுத்துவதற்க்காக மாத்திரமே தேவனை நடனத்தோடு ஆராதியுங்கள்.

 

நம்முடைய ஆராதனைகளில் மனிதர்களை பிரியப்படுத்தாமல் தேவனை மாத்திரம் பிரியப்படுத்தும் படி நடந்து கொள்ளுங்கள். மனிதர்கள் உங்களை மேன்மை படுத்தும் படி எந்த காரியத்தையும் செய்யாதீர்கள். உண்மையிலே தேவ பிரசனத்தில் நிறைந்து நீங்கள் நடனமாடி தேவனை துதிக்கும் போது அது நிச்சயமாக ஆவிக்குறிய ஒழுங்கின் படி இருக்கும். ஆவிக்குறியவன் எல்லாவற்றையும் நிதானித்து அறிகிறான். ஆமென்.

bottom of page