
தேவபயம்
(தேவனுக்கு பயப்படும் பயம்)
நாம் எவ்வளவு அதிகமாய் தேவனை அறிந்திருக்கிறோமோ அவ்வளவு அதிகமாய் தேவனுக்கு பயந்திருப்போம்.
உங்கள் சபைக்கு முதலாவது கர்த்தருக்கு பயப்படுதலை போதித்திருக்கவில்லையென்றால் நீங்கள் எவ்வளவு தான் மற்ற சத்தியங்களை விரிவாய் போதித்திருந்தாலும் நீங்களோ உங்கள் பிரதான பணியில் தோல்வியடைந்துவிட்டீர்கள்.கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.
௧ர்த்தருக்கு பயப்படுகிற மனிதனே ஞானத்தை போதிக்க முடியும். ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்: அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான். நீதி 24-5 ஞானம் ஒரு மனிதனை முதிர்ச்சிக்குள் நடத்தி அன்றாட வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு அவனிடம் உள்ள அறிவை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று போதிக்கும். இன்றைக்கு அநேகரிடம் தேவ பயம் காணப்படுவதில்லை. இவர்களிடம் அறிவு மாத்திரமே உள்ளது. இவர்களிடம் எண்ணற்ற வேறு பயங்கள் காணப்படுகிறது.
சங் 103-11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. ஆனால் கிருபை கிருபை என்று சொல்கிறவர்களிடம் தேவ பயம் இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் தேவனுக்கு பயப்படுகிறவர்கள் அவருடைய கற்பனைகளுக்கு நடுக்கத்தோடு கீழ்ப்படிவார்கள். இவர்கள் தேவ பயமில்லாமல் தங்கள் குற்றங்களை உணராமல் தாங்கள் மனம் திரும்பாமல் பிறரை நியாயம் தீர்த்து நியாயாதிபதியின் ஸ்தானத்தை எடுத்து கொள்கிறார்கள்,ஆனால் தேவனுக்கு பயப்படுகிறவர்களோ தேவனை நோக்கி வேதனை உண்டாக்கும் வழிகள் எங்களிடம் உண்டோ மேலும் எங்களிடம் இருக்கும் உமக்கு பிரியமில்லாத வழிகளை விட்டு விட எங்களுக்கு பெலன் தாரும் என்று தேவ சமூகத்தில் தங்களை தாழ்த்துகின்றனர்.
தேவ சமூகத்தில் தன்னை தாழ்த்திய ஆயக்காரன் தேவ கிருபையினால் நீதிமானாய் திரும்பி சென்றதை போல தேவனுக்கு பயப்படுகிற இவர்கள் தங்களை தாழ்த்தி தேவ கிருபையை பெற்று கொள்கின்றனர்.
இன்றைக்கு சபைகளிலும் குடும்பங்களிலும் ஏன் வாக்குவாதங்கள் பிரிவினைகள்?. ஊழியம் செய்யும் இவர்கள் தேவனுக்கு பயப்படுவதில்லை! என்னாலும் எதையும் செய்யமுடியும், நானும் வேத வசங்களில் தேர்ச்சிபெற்றவன் எங்கின்ற பெருமை........???!! ஊழியத்தில் தாழ்மை இல்லை, பொறுமை இல்லை.... பெருமை, பொராமை.....அய்யோ...........தன் தவறை மறைக்க மற்றவர்களை குற்றம் சுமத்துவதை விட்டுத்தள்ளுங்கள்........ விட்டுத்தள்ளுங்கள் சுயத்தை, சுமப்போம் இயேசுவின் சிலுவையை.
எரேமியா.19-2 உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்து கொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆமென்.