top of page

சுத்திகரிப்பும் ஞானஸ்நானமும் தேவன் முன்குறித்தது

 

பழைய ஏற்ப்பாட்டின் நிழல் புதிய ஏற்ப்பாட்டில் தொடர்ந்து வருகிறது.(அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

கொலோசெயர் 2-17 - ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.

எபிரேயர் 4-11)நான் உன்னை ஜலத்தினால் முழுக்காட்டி, உன்னை இரத்தமற ஸ்நானம்பண்ணுவித்து, உனக்கு எண்ணெய் பூசி, எசேக்கியேல் 16-9கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து, லேவியராகமம் 8-6 பின்பு ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாசலில் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து, யாத்திராகமம் 40 :12 ஆரோனுக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.

யாத்திராகமம் 40 :13யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 

யோவான் 2 :6 எண்ணாகம் 31-19 லிருந்து 24 வரையுள்ள வசனங்களின் படி தண்ணீரினாலும் அக்கினியினாலும் தீட்டுபட்ட பொருள்களை சுத்திகரித்த பின்னாலே அந்த பொருள்களை சொந்தமாக்கி கொள்ளலாம். எசே 36 ல் சுத்தமான ஐலம் தெளிப்பேன் அப்பொழுது சுத்தமாவீர்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.  யூத முறைமையின் படி தண்ணீர் சுத்திகரிப்புக்காக கற்ஜாடிகளை வைத்திருந்தார்கள் (யோவான்2 ம் அதிகாரம்)அது பனி நீர் ஊற்று தண்ணீர் மற்றும் மழை தண்ணீரினால் நிறப்பபடும். ஆண்டவாராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த நீதிக்கு கீழ்படிந்து ஞானஸ்நானம் பெற்றார். உடனே பரிசுத்தாவியானவர் அவரை அபிஷேகித்தார்.உடனே வானம் திறக்கப்பட்டு இவர் என் நேசக்குமாரன் என்று பிதா பேசினார்.பழைய ஏற்பாட்டு காலத்திலே தீட்டு பட்ட பொருள்கள் தண்ணீரினாலும் அக்கினியினாலும் சுத்திகரிக்கப்பட்டு அதன் பின் அப் பொருள்களைஅவர்கள் சொந்தமாக்கி கொண்டது போல நாமும் ஐலத்தினாவும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் பெறும் போது தேவனுக்கு சொந்தமாகிறோம். இயேசு கிறிஸ்து ஆவியினாலும்  அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்று யோவான் ஸ்நானன்  சொன்னார்.தேவன் நோவாவின் நாள்களில் ஜலத்தினால் பூமியை சுத்திகரித்தார்(அழித்தார்)இனி அக்கினியினால் சுத்திகரிப்பார்.அதன் பின்னர் தான் ஆயிர வருட அரசாட்சி.பழைய ஏற்ப்பாட்டு நாள்களிலே ஆசாரியனுக்கு முன்பாக ஜனங்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு தண்ணீரினால் தீட்டு நீங்க சுத்திகரித்து கொண்டார்கள், இது வெளிப்புறமான சுத்திகரிப்பு.

 

புதிய ஏற்ப்பாட்டில் சுத்திகரிப்பாகிய தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம் என்பது உள்ளான புதிதாகுதல்.பேதுரு 3000 பேருக்கு ஞனஸ்நானம் கொடுத்த போது அனைவரும் ஒரே  நேரத்தில் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு  தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றார்கள். யூதர்களின் வீடுகளில் தண்ணீர் சுத்திகரிப்புக்காக தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தது.ஒரு யூதன் தண்ணீரில் மூழ்கும் போது மூச்சை அடக்கி கொள்வது மரணத்துக்கும் தண்ணீரிலிருந்து வெளியே வந்து புதிய சுவாசத்தை பெற்று கொள்வது உயிர்த்தெழுந்த புதிய சிருஷ்டிக்கும் ஒப்பிடப்படுகிறது.புதிய ஏற்பாட்டில் உள்ளான மாற்றத்தை பரிசுத்த ஆவியானவரே செயல்படுத்துகிறார். பழைய ஏற்பாட்டில் வெளிப்புறமான விருத்த சேதனம்,புதிய ஏற்ப்பாட்டில் இருதயத்தில் விருத்த சேதனம் என்ற உள்ளான மாற்றம்.எனவே தேவன் முன் குறித்த ஞானஸ்நானம் என்ற சத்தியத்துக்கு கீழ்படியுங்கள்.

 

புதிய உடன்படிக்கை என்ற புதிய மார்க்கத்தில் இயேசுவின் இரத்தமும் தண்ணீர் சுத்திகரிப்பும்.

 

ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், எபிரேயர் 10 :20தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், எபிரேயர் 10 :21 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

எபிரேயர் 10 :22சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

யோவான் 1-3 6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு. அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

1 கொரிந்தியர் 8 பழைய ஏற்பாடு முழுவதிலும்  ஆண்டவராகிய இயேசுவின் சாயலும் அடிச்சுவடும் தான் காணப்படுகிறது.எனவே அவர் நடந்த படி நாமும் நடப்போம்.அவர் கீழ்படிந்த படி நாமும் ஞானஸ்நானம் என்ற சத்தியத்துக்கு கீழ்படிவோம்.

புதிய ஏற்ப்பாட்டில் ஞானஸ்நானம்

 

ஞானஸ்நானம் கொடுக்க என்னை அனுப்பினவர் தேவன்-யோவான் 1-33. யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாகி(லூக் 3-2) மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தை பிரசங்கித்தான்.லூக்3-6 அடுத்ததாக எல்லா நீதியை நிறைவேற்ற இயேசு ஞானஸ்நானம் எடுத்தார்.மத்3-15 நியாய பிரமாணத்தின் நீதி அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

ரோமர் 8 :3) அதாவது நியாயப்பிரபிரமாணத்தின் நீதியை நிறைவேற்ற வந்தார்.தேவ கட்டளை என்ற நீதிக்கு கீழ்ப்படிந்தார்,ஞானஸ்நானம் எடுத்தார்.அவரே நம் roll model.அவரது அடிச்சுவடை பின் பற்றும் படி மாதிரியை செய்தார்.வைத்து விட்டு சென்றார் ( இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள். ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

1 பேதுரு 2 :21பழைய ஏற்ப்பாட்டில் தண்ணீரினால் சுத்திகரிக்கபடுகிறது,(4 ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி, யாத்திராகமம் 29-4) அநேக காரியங்களை பலிகளையும் தண்ணீரினால் சுத்திகரித்தார்கள். ( அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத காக்கப்பட்டார்கள்.

1 பேதுரு 3 :20 இதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, (past tense)இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.

1 பேதுரு 3 :21 பழைய ஏற்ப்பாட்டின் படி தேவனோடு பண்ணும் உடன்படிக்கையின் ஒரு அடையாளம்,புதிய உடன்படிக்கையின் படி அவருடைய மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டு பாவத்துக்கு மரித்து அவருடைய சாயலில் இணைக்கப்பட்டு நீதிக்கு பிழைத்திருக்கும் படி புதிய சிருஷ்டியாய் மறுபடி பிறக்கும் அனுபவம். மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு,அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

ரோமர் 6 :4ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.

ரோமர் 6 :5 ஞானஸ்நானம் பெறும் போது பழைய மனிதனின் சுபாவங்களை சிலுவையில் அறைந்து புதியஜீவன் உள்ளவர்களாகி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சுபாவங்களை நாம் தரித்து கொள்ளும் உள்ளான மாற்றத்தை பெற்று கொள்வதே பிரதானமானது.

ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே கலாத்தியர் 3 -27தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.

கொலோசெயர் 3-10 ஆமென்.ஞானஸ் நானம் பெறும் போது உள்ளான மாற்றம் ஏற்படவில்லையென்றால் அது வெறும் பாரம்பரியமாகவே இருக்கும்.

bottom of page