top of page

உபத்திரவத்தை சகியுங்கள்

உங்களுக்கு உபத்திரவங்கள் தரும் உங்கள் பக்கத்து வீட்டு காரர்கள் அல்லது உங்கள் உடன் வேலை செய்கிறவர்கள் அல்லது மேலதிகாரிகளின் ஜீவனை தேவன் கனப்பொழுதில் பறித்து  கொள்ள முடியும். ஆனால் அவரோ அதை செய்வதில்லை. பலவிதமான உபத்திரவங்கள் வழியாக தான் தேவன் உங்களை இயேசுவை போல மறுரூபப்படுத்த விரும்புகிறார்,இவ்வேளையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களை நீங்கள் தாழ்த்தி தேவனை ஸ்தோத்தரிப்பது தான்.

 

மேலும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஆண்டவாரே என் பெருமையை உடையுங்கள் என் சுயத்தை நொறுக்கி இயேசுவை போல நீடிய பொறுமையுள்ளவனாய் மாற்றுங்கள். என்னை இயேசுவை போல மாற்றி விடுங்கள் என்று ஜெபிப்பது தான். ஒரு நாள் வாழ்வின் கடைசிக்குள் பிரவேசிக்கிற நீங்கள் உங்கள் ஜீவியத்தை திரும்பி பார்த்து சகலத்தையும் தேவன் உங்கள் நன்மைக்காகவே செய்து முடித்திருக்கிறார் என்று சொல்வீர்கள். ஆகவே இனிவரும் நாள்களில் முறுமுறுத்து குறை சொல்வதை நிறுத்தி கொண்டு எந்த சூழ்நிலையிலும் விசுவாசத்தோடு ஆண்டவரை ஸ்தோத்தரிக்கப் பழகுங்கள். எபி 2-10 ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் உபத்திரவங்களை சகித்து நீடிய பொறுமையை காண்பித்தார். அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றும் படி மாதிரியை நமக்காக வைத்து விட்டு சென்றார். யோவான்16-33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

 

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன் என்ற இயேசு கிறிஸ்து சொன்னபடி உபத்திரவங்களை சகிக்கும் படி தேவசமூகத்தில் காத்திருந்து தேவபெலனை பெற்று கொள்ளுங்கள். நீங்களும் இந்த லேசான உபத்திரவங்களை சகித்து உலகத்தை ஜெயிப்பீர்கள். பூரணராவீர்கள். அல்லேலூயா

bottom of page