உலக ஆசை இச்சைகளுக்கு உன்னை விலக்கி காத்து கொள்.

 

அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். மல் 2-15.

 

உலகத்தால் கறைப்படாதபடி தன்னை காத்து கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான தேவபக்தியாக இருக்கிறது,யாக் 1-27.15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். 1 பேதுரு 1-15.11 இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்கியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! 2பேதுரு 3-11.மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க நம்மை சுத்திகரித்து கொண்டு பரிசுத்தமாகுதலை பூரணபடுத்தி கொள்வோம்.நாம் தேவனுடைய ஆலயம் .

தேவனுடைய ஆலயத்தை தீட்டுபடுத்தாதீர்கள்,உலக ஆசைஇச்சைகளுக்காக தேவன் நமக்கு தந்த விலையேறப்பெற்ற நித்திய ஜீவனை இழந்து போகாதீர்கள்.நமக்கு ஒரு பாலகன் கொடுக்கப்பட்டார்.இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி உங்களுக்காக ஜீவனையே தந்து சிலுவையில் பெற்று தந்த இரட்சிப்பை அசட்டை பண்ணாதீர்கள்.மீட்கப்படும் நாளுக்காக முத்திரையாக பெற்ற பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தாதிருங்கள். சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக.

 

உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.1தெச 5-23விலையேறப் பெற்ற உங்க ஆத்துமாவை காத்து கொள்ளுங்கள்.முழு இருதயத்தோடும் முழு சித்தனையோடும் முழு மனதோடும் நம்மீது அன்பு கூர்ந்த தேவனை நேசிப்போம்.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். யோவான்14-23