top of page

இந்த கொள்ளை நோய் தேவனால் அனுமதிக்கப்பட்டதே!  
இது கடைசி நாள்களின் எச்சரிப்பு.

 

கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். இன்றைக்கு இந்த கொள்ளை நோயை பற்றி இரு வேறு கருத்துக்கள் இருக்கிறது கொள்ளை நோயை தேவன் அனுப்பவில்லை இந்த கொள்ளைநோய் தேவனால் அனுமதிக்கப்படவில்லை என்று சிலர் பேசுகிறார்கள்.  இந்த கொள்ளை நோய் தேவனால் அனுப்பபடவில்லை என்றாலும் இது அனுமதிக்கப்பட்டது என்பது உண்மை. இது கடைசி நாள்களின் எச்சரிப்பு.தன்னை அழைத்த தேவனை நம்பாமல் ஊழியங்களையும் சபை மக்கள் மேலும் நம்பிக்கை வைத்து சத்தியத்தை சத்தியமாக போதிக்காமல் பாவத்தை குறித்தும் நியாயதீர்ப்பை குறித்தும் தேவ நீதியை குறித்தும் போதிக்காமல் எண்ணிக்கைக்காக ஊழியம் செய்து தேவனுடைய ராஜியத்தை கட்டாமல் தங்கள் ராஜியத்தை கட்டி கொண்டிருக்கும் ஊழியக்காரர்களுக்கு தேவனின் எச்சரிப்பு. தேவனை நேசிக்காமல் உலகத்தை நேசித்து கொண்டு இரண்டு எஜமானனுக்கு ஊழியம் செய்கிற அதாவது ஆவிக்குறிய விபச்சாரத்தில் வீழ்ந்து போன கிறிஸ்தவர்களுக்கு தேவனின் கடைசி கால எச்சரிப்பு.

 

சில ஊழியக்காரர்கள் இந்த நோயை எதிர்த்து இயேசுவின் நாமத்தை பயன்படுத்தி யுத்தம் பண்ணி ஜெபிக்கிறார்கள்.

பிரியமானவர்களே இந்த காரியத்தில் மன்றாடி கண்ணீரோடு ஜெபித்து விண்ணப்பம் பண்ணுவதே சரியானது. தேவனால் அனுமதிக்கப்படும் எந்த காரியத்துக்கும் எதிராக அவர் அனுமதியின்றி இயேசுவின் நாமத்தை பயன்படுத்தாதீர்கள்.

 

கிருபையை பற்றி பேசுகிற ஊழியக்காரர்கள் தேவனுடைய ஒரு பக்கத்தை மாத்திரம் எடுத்துப் பேசுவார்கள் இவர்கள் சொல்லுவார்கள். தேவன் மன்னிக்கிறவர் அவர் இரக்கம் நிறைந்தவர். அன்பு நிறைந்தவர் அவர் அப்படி எல்லாம் செய்யமாட்டார். அவர் ஜனங்களை தண்டனைக்கு உட்படுத்துவதில்லை என்றெல்லாம் சொல்வதை பார்க்கலாம்.தேவன் அன்பானவர் தான்.  அவர் அன்பாகவே இருக்கிறார்.

ஆனால் அவருடைய இன்னொரு முகம் இருக்கிறது பட்சிக்கிற அக்கினி. அவர் சர்வ லோகத்துக்கும் நியாயாதிபதி.

வேதாகமத்தில் பல நிகழ்வுகளில் அவர் கோபத்தை பார்க்கலாம்.

 

உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். உபாகமம் 4-24

 

பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள்.  சங்கீதம் 46-8

 

இந்த உலகமே ஒரு பெரிய பாதிப்புக்குள் கடந்து போயிருக்கிறத,   உலகம் முழுவதும் Lock down க்குள் மூழ்கி கிடக்கிறது. இந்த கொள்ளை நோய் தேவனால் அனுமதிக்கப்பட்டது என்று ஒரு சின்ன பிள்ளையிடம் கேட்டாலே சொல்லி விடும். சர்வ வல்லமையுள்ள தேவன் நினைத்தால் இதை தடுத்திருக்க முடியும். பல இடங்களின் இதன் தாக்கம் குறைகிறது ஆனால் முற்றிலும் நீங்கி போகவில்லை. அதாவது, இந்த கடைசி கால உபத்திரவங்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நிமித்தம் குறைக்கப்படும் (மத் 24-22 ) என்று  இயேசு சொன்னார்.

 

வேதாகமத்தில் பல இடங்களில் கொள்ளை நோய்கள் அனுப்பபட்டு ஜனங்கள் உபத்திரவபடுத்தப்பட்ட நிகழ்வுகள் உண்டு. நான் தேசத்தின் மேலே பட்டயத்தை அனுப்புவேன் பஞ்சத்தை அனுப்புவேன் கொள்ளை நோயை அனுப்புவேன் என்று தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் பேசின சம்பவங்கள் உண்டு. கொள்ளை நோய்கள் அனுப்பபட்ட சம்பவங்கள் உங்கள் அனைவருக்கும் தெரியும்.

 

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 55:8

 

 தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.  பிரசங்கி 3:14

 

இந்த கடைசி காலத்தில் உபத்திரவங்கள் அனுமதிக்கப்படுகிறது என்பது தான் உண்மை. ஒரு வேளை நீங்கள் கேட்கலாம் ஏராளமான ஊழியக்காரர்கள் மரித்து போனார்களே!!  மறுபக்கம் ஏராளமான ஊழியக்காரர்கள் இந்த நோயிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்களே!

சரீர மரணம் அதாவது பிராண சேதம் வரலாம். ஆனால் தேவன் நீதிமான்களின் ஆத்துமாவை சேதமின்றி காப்பார். சாவு அவர்களுக்கு ஆதாயம் தான்.

பல ஊழியக்காரர்கள் மற்றும் விசுவாசிகள் மகிமையில் பிரவேசித்தார்கள் என்பது நிச்சயம்.களைகள் பிடுங்கப்படும் போது நாற்றும் பிடுங்கப்படலாம்.

 

உலகில் நடக்கும் நிகழ்வுகளை வேதாகமத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களோடு ஒப்பிட்டு பாருங்கள் உங்கள் குறைந்த அறிவினால் தவறாக போதிக்க வேண்டாம்.

 

ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். மத்தேயு 24:7

இப்படி இயேசுவால் முன்னறிவிக்கப்பட்ட காரியங்கள் நடந்தே தீரும்.எனவே இப்படிபட்ட காரியங்கள் அனுமதிக்கப்படலாம்.

 

இன்றைக்கு இந்திய தேசத்தில் ஒரு வேளை மாத்திரம் சாப்பிடுகிறவர்கள் கோடிக்கணக்கான பேர் விலைவாசி ஏற்றத்தின் தாக்கம் பஞ்சத்தை தானே கொண்டு வரும்.  எவ்வளவு பேர் வாழ்வாதாரத்தை இழந்து போனார்கள்?

உங்களுக்கு நல்ல வேலை இருப்பதால் திரை மறைவில் நடக்கும் காரியங்கள் பற்றி தெரியவில்லை, அதை பற்றி கவலையும் படுவதில்லை. கடைசி கால மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று வேதத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

 

மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில்?  மனுஷர்கள்

  • தற்பிரியராயும்,

  • பணப்பிரியராயும்,

  • வீம்புக்காரராயும்,

  • அகந்தையுள்ளவர்களாயும்,

  • தூஷிக்கிறவர்களாயும்,

  • தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும்,

  • பரிசுத்தமில்லாதவர்களாயும்,

  • சுபாவ அன்பில்லாதவர்களாயும்,

  • இணங்காதவர்களாயும்,

  • அவதூறு செய்கிறவர்களாயும்,

  • இச்சையடக்கமில்லாதவர்களாயும்,

  • கொடுமையுள்ளவர்களாயும்,

  • நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,

  • துரோகிகளாயும்,

  • துணிகரமுள்ளவர்களாயும்,

  • இறுமாப்புள்ளவர்களாயும்,

  • தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,

  • தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்;

இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 2 தீமோத்தேயு 3:1-5

 

மேல் சொல்லப்பட்ட வசனங்களை ஒருமுறை படியுங்கள்.கடைசி நாள்களில் கொடிய காலங்கள் என்று பவுல் எழுதுகிறார்.

 

இன்றைக்கு   உலகத்திலும் சபைகளிலும் ஊழியங்களிலும் மேற் சொல்லப்பட்ட  மனிதர்களை காணலாம்.செய்திகளில் காணப்படும் பயங்கரமான சம்பவங்களில் இப்படிபட்ட மனிதர்களை காணலாம். கடைசிகால மனிதர்களால் செய்யப்படும் கொடுமைகளை உங்களால் விளங்கி கொள்ள முடியவில்லையா? மனிதர்களை பகுத்தறிய கற்று கொள்ளுங்கள்.இந்த கடைசி நாள்களில் வேத வசனத்துக்கு புறம்பாக பேசுகிறவர்களிடம் இப்படியும் எழுதியிருக்கிறதே என்று சொல்லுங்கள்.

 

அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். மாற்கு 13:29

 

பிரியமானவர்களே வேதாகமத்தில் சொல்லப்பட்ட கடைசி கால நிகழ்வுகளை தியானியுங்கள்.

 

ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.  லூக்கா 21:36.

bottom of page