top of page

ஊழியம்  என்ற பெயரில் இணையதளத்தில் வியாபாரம்

இன்றைய மோசமான சூழ்நிலையில் ஊழியம் என்ற பெயரில் இணைய தளம் வழியாக பாடல்களையும் கர்த்தருடைய வார்த்தையையும் காணிக்கை என்ற பெயரில் விலைக்கு விற்கும் கூட்டம் தீவிரித்து வருகிறது.

 

இன்றைக்கு நீங்கள் உருவாக்கிய பாடல்களையும் நீங்கள் பேசிய செய்திகளையும் You tube Channel ல் இலவசமாக upload செய்து கொள்ளலாம்.இன்றைக்கு கிறிஸ்தவ ஜனங்கள் You tube வழியாக எந்த பாடலையும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும். அப்படியிருக்கும் போது ஒரு இணையதளத்தை உருவாக்கி இதில் குறிப்பிட்ட பணம் செலுத்தி உங்களை இணைத்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுக்கு தேவையான பாடல்கள் மற்றும் செய்திகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று விளம்பரம் செய்கிறார்கள்.

 

சமீப காலத்தில் ஒரு கிறிஸ்தவ TV channel ஐ நடத்துகிறவர்...நீங்கள் உருவாக்கிய குறும்படங்கள், பாடல்கள் புஸ்தகங்கள் மற்றும் செய்திகளை தேவன் விலைக்கு கொடுக்க கூடாது, இலவசமாக கொடுங்கள் என்று சொன்னதாக சொன்னார். மேலும் அவர் இலவசமாக down load பண்ணும் படிக்கு எல்லா Payment வழிகளையும் ரத்து செய்கிறேன் என்று ஜனங்களுக்கு அறிவித்தார். மேலும் விலைக்கிரயம் கொடுத்து தயாரித்து உருவாக்கினவைகளை இலவசமாக பெற்று கொள்ளும்படி செய்தார்.

சில நாள்களுக்கு முன்பு மத்திய கிழக்கு  நாடுகளுக்காக இணையதளத்தில் விளம்பரங்களோடு ஜெபிக்க வந்த சில ஊழியக்காரர்கள் தங்கள் இணையதள Products ஐ விளம்பரபடுத்த ஆரம்பித்தார்கள்.ஜெபிக்க அழைக்கபட்ட இவர்களது செயல்கள் அநேகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்றைய சூழ்நிலையில் தேவனை நோக்கி கண்ணீரோடு பாரத்தோடு ஜெபிக்கும் காலம். மத்திய கிழக்கு நாடுகளில் அநேகர் வேலையிழந்து தங்கள் எதிர்காலத்தை இழந்து கண்ணீரோடு நிற்கின்றனர். அநேகர் தங்கள் சொந்த தேசத்துக்கு கடந்து போயிருக்கின்றனர். இவர்களுக்காக கண்ணீரோடு ஜெபிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.  மேலும், இந்த சூழ்நிலை நாளைக்கு உங்களுக்கு வராது என்று என்ன நிச்சயம்?! ஊழியம் என்ற பெயரில் தங்கள் இணைய தள App ஐ விலைக்கு விற்க்கும் இவர்களை ஏன் அனுமதிக்கிறீர்கள். இவர்கள் இயேசுவை Promote பண்ணுகிறார்களா அல்லது தங்கள் App ஐ Promote பண்ணுகிறார்களா?இவர்களுக்கு பின்புலத்தில் இருப்பது யார்?இவர்கள் ஊழியம் செய்கிறார்களா?அல்லது இயேசுவின் பெயரில் வியாபாரம் செய்கிறார்களா? அல்லது தேவனுக்கும் உலக பொருளுக்கும் ஊழியம் செய்கிறார்களா?அநேக ஊழியக்காரர்கள் இவர்களுக்கு விலை போய்விட்டார்களே??

சமீபத்தில் 2000 ம் ஆண்டு ஆசீர்வாதத்தின் ஆண்டு செழிப்பின் ஆண்டு...மேலும் நாங்கள் இனிமேல் ஊழியத்துக்கு காரில் வரமாட்டோம்.விமானத்தில் தான் வருவோம்...இது மாதிரி ஊழியக்காரர்கள் பேசின காரியங்களை இந்து அமைப்பினர் இயேசுவின் நாமம் தூசிக்கும் படி கிண்டல் செய்து தங்கள் குழுக்களில் பதிவிடுகிறார்கள்.சில ஊழியக்காரர்கள் இணையதளத்தில் தங்கள் குடும்பத்தினரின் டாம்பீக வாழ்க்கையை பற்றி விதவிதமாக வெளியிடுகிறார்கள்.


இவர்களது உயர்ந்த உடைகள் உயர் ரக கார்கள் மேலும் வெளிநாடுகளில் சுற்றுலா செல்லும் காட்சிகளை இணையதளத்தில் பார்த்து ஒரு கூட்டம் ரசிகர்கள் God bless you என்று ஜால்ரா போட்டு கொண்டிருக்கிறார்கள்.


இவர்கள் எந்த நோக்கத்துக்காக இதை செய்கிறார்கள் என்று நீங்கள் யோசியுங்கள்.ஏன் உங்களுக்கு நிதானித்து அறிய நேரமில்லையா? இவர்கள் செலவிடும் பணம் யாருடையது?


நீங்கள் இவர்களை பயன்படுத்தும் போது இவர் செய்த காரியங்கள் நடக்கைகள் எல்லாம் சரி என்று ஒத்து கொள்கிறீர்கள் அப்படி தானே?எல்லா நாமத்துக்கும் மேலான இயேசுவை உயர்த்தும் இடத்தில் தங்களையும் தங்கள் ஊழியத்தையும் தங்கள் பிள்ளைகளையும் உயர்த்துவது விக்கிரக ஆராதனை. இவர்கள் ஜனங்களை இயேசுவுக்கு நேராக திருப்பாமல் தங்களுக்கு நேராக திருப்புகிறார்கள்.

 

இயேசு  கிறிஸ்து ஊழியம் செய்த பிறகு நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள்...கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்ல சொன்னார். இவர்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் என்று சொல்லும்படியா நடந்து கொள்கிறார்கள்??இவர்கள் தேவனுடைய மகிமையை தேடாமல் மனிதர்களால் வரும் மகிமையை தேடுகிறார்கள்.அதை தனக்காக்கி கொள்கிற மேட்டிமையான இருதயத்தை உடையவர்கள்.


ஆத்தும பாரம் இல்லாத இவர்களை கொண்டு ஜெப எழுப்புதல் எப்படி நடத்துகிறீர்கள்? நீங்கள் அனுப்பும் காணிக்கை களப்பணி செய்து ஆத்தும ஆதாயம் செய்யும் ஊழியக்காரர்கள், திக்கற்றோர்கள் மற்றும் மிஷனரிகளுக்கு அனுப்பும் போது அதன் மூலம் வரும் ஆசீர்வாதம் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வரும்.

கள்ள போதகர்கள் கள்ள தீர்க்கதரிசிகள் உங்களுக்குள் இருப்பார்கள் என்று இயேசு எச்சரித்தார்.கனிகளினால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்றார். பெருமையினால் தங்களை உயர்த்தி கொண்டு வீண் புகழ்சியை நாடி பண ஆசையில் வீழ்ந்து போன இவர்களை பயன்படுத்தும் குருடருக்கு வழிகாட்டும் குருடர்களே...உங்கள் சபை ஜனங்கள் வஞ்சிக்கப்பட நீங்கள் காரணமாயிருக்காதீர்கள்.பிரியமானவர்களே!!?


மனுஷ குமாரன் வரும் கடைசி நாள்களில் இருக்கிறோம். எனவே வேகமாக சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும்  இனி காலம் செல்லாது என்ற நாள்களில் வந்து விட்டோம். இந்த கடைசி நாள்களில் ஊழியம் என்ற பெயரில் தங்கள் Products  களை Promote பண்ணுவது சரியில்லையே? ஊழியக்காரர்களே! விசுவாசிகளே!


இன்னும் நீங்கள் உணர்வடையவில்லையா? ஊழியக்காரர்களை நடிகர்களை பார்ப்பது போல பார்த்து ஏமாந்து போய் விடாதீர்கள். இத்தகய ஊழியக்காரர்கள் எதற்கு முதலிடம் கொடுக்கிறார்கள் என்பதை பகுத்தறியவில்லையா? ஜனங்கள் ஏமாந்து போவதற்கு துணை போகாதீர்கள். தேசத்தின் இரட்சிப்புக்காகவும் மனம் திரும்புதலுக்காகவும் கண்ணீரோடு ஜெபிக்கும் காலம் இதுவல்லவா?ஊழியம் பொழுது போக்கு அல்ல.ஊழியம் வியாபாரம் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.


ஊழியத்தில் மனசும் மாம்சமும் விரும்பினவைகளை செய்யாதீர்கள். சந்திப்பின் நாளிலே இயேசு உங்களை பார்த்து அக்கிரம சிந்தைகாரனே உன்னை அறியேன் என்று சொல்லும் போது எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும். ஊழியம் செய்தால் அவருடைய சித்தம் செய்யுங்கள். ஊழியக்காரனுக்கே அதிக ஆக்கினை என்று வேதம் எச்சரிப்பதை மறந்துவிடாதீர்கள்.......

bottom of page