பிலேயாமும் கழுதையும் உரையாடுதல்
பிலேயாம்: கழுதையே சீக்கிரமாய் எழுந்திரு நாம் முக்கியமான ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும்
கழுதை: எந்த ஸ்தலத்திற்கு ஐயா
பிலேயாம்: கேள்வியெல்லாம் கேட்காமல் ஒழுங்காக கீழ்ப்படிதலோடு என்னோடு வா
கழுதை: ஐயா எந்த இடத்திற்கு போகும் போதும் முதலில் ஜெபித்து விட்டு பிறகு போகலாமா வேண்டாமா என்பதை கர்த்தர் அல்லவா முடிவு செய்வார்
பிலேயாம்: எனக்கே புத்தி சொல்கிறாயா நான் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே.
கழுதை: ஐயா நீங்கள் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அறிவுரை சொல்லுகிறேன்.
பிலேயாம்: ஏன் அப்படி சொல்லுகிறாய் நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் கர்த்தர் ஏற்படுத்தின தீர்க்கதரிசிதான் என்பதை ஒருபோதும் மறந்து விடாதே.
கழுதை: கர்த்தருடைய தீர்க்கதரிசி கர்த்தருடைய வார்த்தைக்கு நிச்சயமாக கீழ்ப்படிவான் அதுமட்டுமல்லாமல் அவன் உலகத்திற்கு வேலைக்காரனாய் இரான் கர்த்தருக்கு மட்டுமே வேலைக்காரனாய் இருப்பான்.
பிலேயாம்: நீ என்ன பிதற்றுகிறாய், உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா அல்லது அதிகமாக கொழுப்பு ஏறி விட்டதா? நீ என்னிடம் அடி வாங்கி அதிக நாள் ஆகி விட்டது. ஆகவேதான் இப்படி பேசுகிறாய்.
கழுதை: கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே பிரியம் என்று சொன்னார். அப்படியென்றால் இஸ்ரவேலுக்கு தீங்கு ஏற்படுத்துகிற எந்த ஒரு காரியத்திற்கும் செல்லாதே என்பது பொருள் ஆனால் நீரோ பாலாக் ராஜாவின் பொருட்கள் மேல் ஆசைப்பட்டு மாணிக்கத்தை இழக்கப் போகிற உம்மைப் போல் மதிகெட்ட தீர்க்கதரிசி யாருமே இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள்.
பிலேயாம்: ராஜா என்னை மூன்று தடவை அழைத்து விட்டார் ஆகவே நான் அவருக்கு கீப்படியவில்லையென்றால் என்னைக் கொன்று போட நேரிடும்.
கழுதை: கர்த்தருக்குக் கீழ்ப்படிவதால் அவன் உன்னை கொன்று போடுவானானால் அதை மிகவும் சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளும் இதுதான் சரியான நேரம் இப்படியாக நீர் மகா பரிசுத்தமான பரலோகத்திற்கு நேரடியாக சென்று விட முடியும்.
பிலேயாம்: ஐயோ நான் எவ்வளவு பெரிய பாவம் செய்து பரலோகத்திற்கு எதிரியாக மாற இருந்தேன் நீயோ நான் தீர்க்கதரிசி என்றுக் கூட பாராமல் எனக்குப் பட்சமாய் பேசாமல் உண்மையை பேசினாய் ஆகவே உமக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்னை மன்னித்து விடு.
கழுதை: ஐயா இப்பொழுதுதான் கர்த்தருடைய தீர்க்கதரிசி என்கிற பட்டம் உங்களுக்கு சரியாக இருக்கும்.